சூர்யாவுக்காக கவுதம் மேனன் தயார் செய்த கதையில் சிம்பு.. இசை ரஹ்மான்!
சூர்யாவுக்காக கவுதம் மேனன் தயார் செய்த கதையில் இப்போது நடிக்கப் போகிறவர், சிம்பு.
கவுதம் மேனனுக்கு இது சிக்கலான காலம். அவர் அறிவித்த படங்கள் வரிசையாக கைவிடப்படும் நிலை.
அஜீத், விஜய் அடுத்து சூர்யா என மூன்று மெகா பட்ஜெட் படங்களை அறிவித்த பின்னர், ஹீரோக்கள் பின் வாங்கியதால் பெரும் பின்னடைவுக்கு ஆளாகியுள்ளார்.

சிம்பு
இந்த சூழலில் அவருக்கு கைகொடுக்க தானாக முன்வந்துள்ளார் சிம்பு. சூர்யாவுக்காக தயார் செய்த கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்து, அதில் தானே நடிக்க சம்மதித்து, ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
இது கவுதம் மேனனுக்கு பெரிய தெம்பைத் தந்துள்ளது.

ஏ ஆர் ரஹ்மான்
இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துத் தர சம்மதித்துள்ளார். மேலும் துருவ நட்சத்திரம் படத்துக்காக கமிட் ஆன அத்தனை கலைஞர்களுமே இந்தப் படத்தில் தொடர்கிறார்கள்.

உடனே தொடங்குகிறது...
தற்போது பாண்டிராஜின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, அந்தப் படம் முடியும் முன்பே கவுதம் மேனன் படத்திலும் நடிக்கிறார்.

வெற்றி தொடருமா..
ஏற்கெனவே கவுதம் மேனனும் சிம்புவும் இணைந்து விண்ணைத் தாண்டி வருவாயா என்ற வெற்றிப் படத்தைத் தந்தனர். அந்தப் படத்துக்கும் ரஹ்மான்தான் இசையமைத்தார். இப்போது மீண்டும் அதே கூட்டணி தொடர்கிறது...

ஹீரோயின்?
இந்தப் படத்தில் ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியிருந்த போது, த்ரிஷாதான் ஹீரோயின் என்பதில் கவுதம் மேனன் பிடிவாதமாக இருந்தார். இப்போது சிம்புவுக்கு யார் ஜோடி என்று தெரியவில்லை.. ஒருவேளை ஹன்சிகா வருவாரோ?


Click it and Unblock the Notifications











