சிம்பு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதற்கு பெரியார் காரணமாமே!

By Siva

சென்னை: தான் தைரியமாக மனதில் பட்டதை பேசி சர்ச்சையில் சிக்கினாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பெரியார் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

சிம்பு பாடி ஆடிய பெரியார் குத்து பாடல் பிரபமானது. இந்நிலையில் அந்த பாடலை தயாரித்த தீபன், சஞ்சய், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, சிம்பு ஆகியோருக்கு திராவிடர் திருநாள் விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அந்த விழாவில் பேசிய சிம்பு கூறியதாவது,

கடவுள்

கடவுள்

பெரியார் ஐயாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரேயொரு விஷயம் தான். கடவுளாக மாற மனிதனை நினை என்பது தான். ஒரு மனிதனாக சக மனிதனை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் கடவுளை பற்றி எப்படி புரியும்.

சர்ச்சை

சர்ச்சை

இத்தனை பேர் சினிமாவில் இருக்கும்போது மனதில் பட்டதை பேசிவிடுகிறீர்கள், உங்களை பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வருகிறது, அதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்கிறீர்களே என்று பலர் என்னிடம் கேட்டதுண்டு. என் தன்னம்பிக்கைக்கு என் அப்பா டி. ஆர். காரணம்.

பேச்சு

பேச்சு

மனதில் பட்டதை எல்லாம் பேசலாம், அதனால் வருவதை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை என்கிற தைரியத்தை எனக்கு கொடுத்தது கண்டிப்பாக பெரியார் தான். அதனால் தான் என்னால் இப்படி பேச முடிகிறது. முதலில் நாம் நாமாக இருக்க வேண்டும்.

ஆண்

ஆண்

ஒரு ஆண் மகனாக பெரியார் பெண்களுக்காக பேசியது சாதாரண விஷயம் கிடையாது. உணர்வால் நாம் என்றுமே ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பெரியார் பேசியது எல்லாமே குத்து போன்றது. அதனால் பெரியார் பாடல் என்று இல்லாமல் பெரியார் குத்து எனப் போட்டோம். அந்த பாடலின் வெற்றிக்கு நான் அல்ல பெரியார் தான் காரணம் என்றார் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X