விரைவில் மன்மதன் 2… அதிரடியாக முடிவெடுத்த சிம்பு…ஜோதிகா இடத்தில் யார்?

சென்னை: மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் மீண்டும் கோலிவுட்டில் பிஸியாக வலம் வருகிறார் சிம்பு.

தற்போது பத்து தல படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தப் படம் மன்மதன் செகண்ட் பார்ட்டாக இருக்கும் என்பதோடு, மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ரேஸில் வந்த சிம்பு

மீண்டும் ரேஸில் வந்த சிம்பு

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். ஆனால், திறமையான நடிகராக இருந்தாலும் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவது என பல சர்ச்சைகளால் அடிக்கடி ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். இந்நிலையில், 'மாநாடு' திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, 'வெந்து தணிந்தது காடு' படம் மூலம் மீண்டும் ரேஸில் இணைந்தார். சிம்பு நடுவில் சில காலம் நடிக்காமல் இருந்தபோதும், ரசிகர்கள் அவரது இடத்தை வேறு யாருக்கும் கொடுத்துவிடவில்லை. அதனால், மாநாடு, வெந்து தணிந்தது காடு இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டின.

விரைவில் இயக்குநராக முடிவு

விரைவில் இயக்குநராக முடிவு

சிம்புவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பத்து தல திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஏஜிஆர் என்ற கேங்ஸ்டாராக சிம்பு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிம்பு தனது அடுத்தப் படம் குறித்து தீவிரமாக யோசித்து வருகிறாராம். சிம்பு நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான 'மன்மதன்' திரைப்படம், சூப்பர் ஹிட் அடித்தது. சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படத்தின் கதை, திரைக்கதையை சிம்பு எழுதியிருந்தார். சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, முருகன் இயக்கியிருந்தார், யுவன் இசையமைத்திருந்தார்.

சிம்புவின் இயக்கத்தில் மன்மதன் 2

சிம்புவின் இயக்கத்தில் மன்மதன் 2

மன்மதனை தொடர்ந்து 2006ல் வெளியான 'வல்லவன்' படத்தை சிம்பு இயக்கியிருந்தார். சிம்புவும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ரீமா சென், நடித்திருந்த 'வல்லவன்' நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், மன்மதன் படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்பு இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை சிம்பு வேகமாக எழுதி வருகிறாராம். சிம்பு இயக்கி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் அவரின் 50 அல்லது 51வது படமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் ஜோடி ஜோதிகாவா?

சிம்புவின் ஜோடி ஜோதிகாவா?

மன்மதன் 2 ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என்றும், படம் 2024ல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக வெளியான தகவல், கோலிவுட் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மன்மதன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஜோதிகா, இரண்டாம் பாகத்திலும் சிம்புவுடன் இணைவாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார்.

ஜோதிகா இல்லையென்றால் யார்?

ஜோதிகா இல்லையென்றால் யார்?

மன்மதன் படத்தில் சிம்பு - ஜோதிகா ஜோடியின் கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க்அவுட் ஆகியிருந்தது. இந்நிலையில், மன்மதன் 2 படத்தில் ஜோதிகா நடிக்கவில்லை என்றால் வேறு எந்த நடிகையை சிம்பு செலக்ட் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதன்படி இப்போதைக்கு சிம்புவின் லிஸ்ட்டில், சித்தி இத்னானி, அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வு அறிவிப்பும் அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X