சிம்பு இப்படி செய்வார்னு சத்தியமா எதிர்பார்க்கவில்லை!!!
சென்னை: 90 எம்.எல். படத்தை பார்த்தவர்கள் சிம்புவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் கடந்த 1ம் தேதி ரிலீஸானது. படத்திற்கு இசையமைத்ததுடன் கவுரவத் தோற்றத்திலும் வந்திருந்தார் சிம்பு.
சிம்புவை பார்க்கவே அவரின் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர்.
ஓவியா
சிம்புவும், ஓவியாவும் லிப் டூ லிப் முத்தக் காட்சிகளில் நடித்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து தான் போனார்கள். அதுவும் திரையில் வந்த வேகத்தில் இரண்டு முறை ஓவியாவுடன் லிப் டூ லிப் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

தேவையா?
90 எம்.எல். படம் மூலம் ஓவியாவின் இமேஜ் டேமேஜாகியுள்ளது. ஓவியா கெட்டதுடன் சிம்புவையும் கெடுத்துவிட்டாரே என்ற பேச்சு கிளம்பியுள்ளது. சிம்புவுக்கு இந்த தேவையில்லாத வேலை தேவையா என்று சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள்.

இமேஜ்
சிம்பு முன்பு போன்று வம்பு செய்வது இல்லை, சமத்துப் பிள்ளையாகிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் இப்படி முத்தக் காட்சியில் நடித்து பெயரை கெடுத்துள்ளார். முத்தக் காட்சியில் நடிப்பது தவறு இல்லை ஆனால் சிம்பு இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

விளாசல்
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை உள்ளது. அதை எல்லாம் விட்டுவிட்டு இப்படி ஒரு ஏ படத்தை எடுத்துள்ளார் அனிதா. அது தெரிந்தும் நடித்திருக்கிறாரே ஓவியா என்று பலரும் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போன்று ஓவியா அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications











