»   »  ஜெயலலிதா ஆத்மா சாந்தி அடையாமல் சுற்றி சுற்றி வருகிறது என்கிறாரா சிம்பு?

ஜெயலலிதா ஆத்மா சாந்தி அடையாமல் சுற்றி சுற்றி வருகிறது என்கிறாரா சிம்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜெயலலிதா ஆத்மா சாந்தி அடையல!

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பிரச்சனை நடப்பதற்கு ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையாதது தான் காரணம் என்கிறார் சிம்பு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் நேற்று மவுன அறவழிப் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

ஸ்டிரைக்

ஸ்டிரைக்

திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் நிறைய பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கிறது. சினிமா ஸ்டிரைக் நடப்பதால் யாருக்கும் வேலை இல்லை.

சினிமா

சினிமா

சினிமாக்காரர்களுக்கு இருக்கும் பிரச்சனையை தமிழக அரசிடம் கூறி தீர்க்கவே திண்டாடும்போது காவிரி, ஸ்டெர்லைட்டுக்காக போராடுவது எனக்கு சத்தியமாக புரியவில்லை.

பிரச்சனை

பிரச்சனை

பேசாததால் தான் இவ்வளவு பிரச்சனை. பேசினால் தானே தீரும் பிரச்சனை. போராட்டத்திற்கு என்னை கூப்பிடவும் இல்லை. அதுபற்றி இங்கு பேச வேண்டாம்.

சூனியம்

சூனியம்

முன்னாள் முதல்வர் அம்மா இறந்தபிறகு தமிழகத்திற்கு சூனியம் வைத்தது போன்று தொடர்ந்து பிரச்சனைகளாக உள்ளது. ஒரு பேய் தனக்கு அநீதி இழைக்கப்படுவதால் சுற்றி சுற்றி வரும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இறந்தும் அவர் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அந்த உண்மை என்று வெளியே வருகிறதோ அன்று தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும் என்றார் சிம்பு.

English summary
Actor Simbu said that Tamil Nadu is facing lot of problems ever since former CM Jayalalithaa passed away. He added that, TN will be calm when the reason for Jaya's death is revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X