Simbu - சூப்பர் ஹிட் கொடுத்த இளம் இயக்குநரை அழைத்த சிம்பு?.. சம்பவம் ரெடியோ?
சென்னை: Simbu (சிம்பு) போர்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவை சிம்பு அழைத்திருப்பதாகவும் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
சிம்பு பல பிரச்னைகளை கடந்து ஈஸ்வரன் படத்தின் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அந்தப் படம் தோல்வி அடைந்ததை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூல் செய்தது. இதனைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்து இனி எங்கள் எஸ்டிஆருக்கு வீழ்ச்சியே கிடையாது என ஆனந்த கூத்தாடினர்.

வெந்து தணிந்தது காடு: இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து நல்ல வசூலை ஈட்டியது.குறிப்பாக படத்தில் சிம்புவின் நடிப்பைப் பார்த்த திரையுலகினர் பலர் சிம்பு எவ்வளவு பெரிய நடிகர் என்பதை வெந்து தணிந்தது காடு மூலம் நிரூபித்துவிட்டார் என மனதார பாராட்டினர். அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்தார்.
பத்து தல: இரண்டாவது இன்னிங்ஸில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையோடு படம் வெளியானது. கன்னட படத்தின் ரீமேக்காக உருவாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது படம். இருந்தாலும் சிம்புவின் நடிப்பு அட்டகாசமாக அமைந்தது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இனி பாருங்க எப்போதும் விடமாட்டேன் என தனது ரசிகர்களிடம் சிம்பு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிக்கலில் சிம்பு: பத்து தல சறுக்கினாலும் சிம்புவின் நடிப்பும், எனர்ஜி லெவலும் வேறு லெவலில் இருந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயகக்த்தில் தாந்து 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிம்பு. ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் போடப்பட்ட ஒப்பந்தப்படி சிம்பு நடக்கவில்லை என தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கௌதம் மேனன் இயக்கம்: அதுதொடர்பாக அவரிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது. சிம்பு அளிக்கும் விளக்கம் திருப்தியாக இல்லாதபட்சத்தில் அவருக்கு ரெட் விதிக்கபப்டும்.எனவே ஐசரி கணேஷ் படத்தில் நடிப்பதற்கு சிம்பு ஒத்துக்கொண்டார் எனவும் இயக்குநர் தேடும் படலம் நடந்துவருவதாகவும் பெரும்பாலும் கௌதம் மேனன் இயக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் இருவருக்கு உரசல் என்ற ஒரு தகவலும் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போர்தொழில் இயக்குநருடன் சிம்பு: இந்நிலையில் விக்னேஷ் ராஜா என்ற புதுமுக இயக்குநர் சரத்குமார், அசோக் செல்வனை வைத்து போர்தொழில் என்ற படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டாகியுள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த படம் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. இதனையடுத்து அந்த இயக்குநருக்கு சிம்புவிடமிருந்து அழைப்பு சென்றிருப்பதாகவும் விரைவில் இருவரும் இணைந்து படம் பண்ணலாம் எனவும் திரைத்துறையில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











