“மாநாடு“ வெற்றி பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றி... சிம்பு ட்விட்டரில் நெகிழ்ச்சி!

சென்னை : மாநாடு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் சிம்பு ட்விட்டரில் நன்றி கூறி உள்ளார்.

Recommended Video

Maanadu மாஸ்! தெறிக்க விடுகிறார்..Simbu..ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil Filmibeat

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

டைம் லூப் கான்சேப்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு

மாநாடு

மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி நேரத்திதில் திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பட வெளியீட்டைத் தள்ளி வைப்பதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இருப்பினும், இரவில் இயக்குநர் வெங்கட் பிரபு படம் திட்டமிட்டபடி வெளியாகும் என ட்வீட் செய்திருந்தார்.

சிம்புக்கு கம்பேக்

சிம்புக்கு கம்பேக்

இருப்பினும், காலை 5 மணி ஸ்பெஷல் காட்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டு காலை 9 மணிக்குப் பின்னரே படம் ரிலீஸ் ஆனது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்தனர். இப்படம் சிம்புக்கு மிகப்பெரிய ஒரு கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் சிம்புவை கொண்டாடினர்.

டைம் லூப்

டைம் லூப்

டைம் லூப் என்ற வித்தியாசமான ஒரு முறையை கையில் எடுத்த வெங்கட் பிரபுவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பார்த்து அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். மாநாடு படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், டிக்கெட் புக்கிங் மேலும் அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் மேலும், அதிகமான காட்சிகளும், திரைகளும் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

சூர்யாவுக்கு நன்றி

சூர்யாவுக்கு நன்றி

இந்நிலையில் நடிகர் சிம்பு மாநாடு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தியவர்களுக்கு ட்விட்டரில் நன்றி கூறி வருகிறார். நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்துக்கள், படம் சாதனைகளை முறியடித்து வெற்றிபெறட்டும் என்று வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு இன்று நடிகர் சிம்பு நன்றி அண்ணா என கூறியுள்ளார்.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

அதே போல, நடிகர் ஆர்யா, மாநாடு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அவருக்கும் நடிகர் சிம்பு நன்றி கூறியுள்ளார். அதேபோல, சிவகார்த்திகேயனுக்கும் நடிகர் சிம்பு நன்றி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X