அன்புத் தம்பியை இழந்துவிட்டேன்.. கொரோனாவுக்கு குட்லக் சதீஷ் மரணம்.. மனமுடைந்து போன சிம்பு!
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த குட்லக் சதீஷ் மரணத்தால் நடிகர் சிம்பு மிகவும் வேதனையடைந்து மனமுடைந்து போயுள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு காரணமாக நாள்தோறும் பொதுமக்களும் திரை பிரபலங்களும் உயிரிழக்கும் சோகம் ஏற்பட்டுள்ளது.
எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அகில இந்திய மாநிலச் செயலாளர் குட்லக் சதீஷ் கொரோனா காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

குட்லக் சதீஷ் மரணம்
குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த நடிகர் சிம்பு ஹீரோவாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தில் இருந்தே அவருக்கு தீவிர ரசிகராக இருந்து வந்தவர் குட்லக் சதீஷ். கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குட்லக் சதீஷ் காலமானார்.

அன்புத் தம்பியை இழந்துவிட்டேன்
எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அகில இந்திய மாநிலச் செயலாளர் குட்லக் சதீஷ் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புத் தம்பியும் காதல் அழிவதில்லை படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரனுமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்திருக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவசரப்பட்டு விட்டாய்
உன்னை இழந்துவிட்டதை நம்பமுடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன். நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய். போய் வா சகோதரா. அழுகையோடு வழியனுப்பி வைக்கிறேன்.
இன்னொருவரை இழக்க விரும்பவில்லை
கொரோனா வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். மன தைரியத்துடன் எதையும் சமாளிக்க முயலுங்கள். பயம் தான் நம்மை வீழ்த்துகிறது. பயம் தான் நம்மை குணமாவதில் இருந்து தடுக்கிறது. தேவையான மருத்துவம் பார்ப்பதை விட தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்போம். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை என உருக்கமாக அந்த கடிதத்தில் நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
ரசிகர்கள் இரங்கல்
"அகில இந்திய சிலம்பரசன் TR தலைமை நற்பணி இயக்கத்தின் இமயம் சரிந்து விட்டது.. அண்ணா எழுந்து வா" என்றும் நம்பவே முடியவில்லை நல்ல மனுஷன் அவர் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் சிம்புவின் ட்வீட்டுக்கு கீழே கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











