படத்துலயும் ஜோடி இல்லை.. நிஜத்திலும் ஜோடி இல்லை.. பத்து தல விழா மேடையில் புலம்பிய சிம்பு!
சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடைசியாக மேடை ஏறி பேசிய சிம்புவின் பேச்சு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.
இந்த நிகழ்ச்சியில் அழக் கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் தான் வந்தேன் என பேசி ஆரம்பத்திலேயே ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து விட்டார் சிம்பு.
மேலும், தனக்கு இந்த படத்தில் ஜோடி இல்லை என்பது குறித்து சிம்பு புலம்பியது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பத்து தல ஃபங்ஷன்
வரும் மார்ச் 30ம் தேதி பத்து தல திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக பத்து தல படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக மார்ச் 18ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடத்தினர். ஏகப்பட்ட சிம்பு ரசிகர்கள் அரங்கையே நிரம்பச் செய்து சிம்புவுக்கு நாங்க எப்போதுமே பக்க பலமா இருக்கோம் என்பதை நிரூபித்தனர்.
இனிமே அழமாட்டேன்
தொடர்ந்து சிம்பு பட நிகழ்ச்சிகளில் எல்லாம் கண்ணீர் விட்டு பேசி வந்த சிம்பு, பத்து தல இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அழுது விடக் கூடாது என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உள்ளேன் என பேசினார். இனிமே அழமாட்டேன், எனக்கு வேண்டியதை ரசிகர்களாகிய நீங்க நிறையவே கொடுத்துட்டீங்க, இனிமே சோக சீனே கிடையாது சந்தோஷம் தான் என ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் சிம்பு.

சிவராஜ்குமார் அளவுக்கு இருக்காது
கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த பத்து தல. அந்த படத்தில் சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க முடியும் என ஆரம்பத்தில் ரொம்பவே யோசித்தேன். கடைசி வரை அவர் ரேஞ்சுக்கு நான் நடிக்கல, நமக்கு என்ன வருமோ ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்துள்ளேன் என்றார்.

டெய்லி டிரான்ஸ்பர்மேஷன்
டிரான்ஸ்ஃபர்மேஷன் என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி வருகிறேன். இந்த படத்துக்காக ஆரம்பத்தில் குண்டாக இருந்தேன். அதன் பின்ன மாநாடு படத்துக்காக ஒல்லியா மாறினேன். மீண்டும் இந்த படம் கிடப்பில் கிடந்த நிலையில், ஆரம்பிக்கப்பட்டது. மறுபடியும் உடல் எடையை இயக்குநர் போடச் சொன்னார், எப்படி குறைத்த உடம்பை மீண்டும் போட்டு நடித்து ரிஸ்க்கில் சிக்குவது என யோசித்தேன். கவுதம் கார்த்திக்காகவும் என் ரசிகர்களுக்காகவும் பண்ணலாம் என ரிஸ்க் எடுத்தேன். இப்போ மீண்டும் ஸ்லிம்மாகிட்டேன். டிரான்ஸ்பர்மேஷன் என்பது டெய்லியும் நடக்க வேண்டிய ஒரு விஷயம் என்பதை புரிந்து கொண்டேன். முன்பெல்லாம் கத்தி பேசுவேன், இப்போ அதை குறைச்சிக்கிட்டேன் எல்லாம் உங்களுக்காகத்தான் எனக் கூறினார்.

ஜோடி இல்லை
படத்தில் கவுதம் கார்த்திக்கின் ஜோடி தான் பிரியா பவானி சங்கர். சாயிஷா ஒரு பாட்டுக்கு கவுதம் கார்த்தியுடன் தான் குத்தாட்டம் போடுகிறார். இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை. படத்திலும் இல்லை நிஜத்திலும் இல்லை என இன்னமும் தனக்கு திருமணம் ஆகாதது குறித்து லேசாக வருத்தப்பட்டு புலம்பிய சிம்பு, அதுபற்றி நான் ஒண்ணும் பெருசா கவலைப்படலை என மீண்டும் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.

லூசுப்பெண்ணே பாடலுக்கு டான்ஸ்
கடைசியாக ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என சொல்லிவிட்டு லூசுப்பெண்ணே பாடலை பாட ஆரம்பித்து பின்னர் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தினார். பழைய சிம்புவாகவே டோட்டலாக மாறிட்டாரே என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களுக்கு உணவு இருக்கு சாப்பிட்டு சேஃப்டியா போங்க என்றும் கேட்டுக் கொண்டார் சிம்பு.

கவுதம் மேனனை மறந்துட்டார்
இயக்குநர் கிருஷ்ணா எப்படி பேசும் போது கவுதம் மேனனை மறந்தாரோ அதே போலவே சிம்புவும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தது பற்றி சொல்லும் போது கூட கவுதம் மேனன் பற்றி சொல்லவே இல்லை. பத்து தல படத்தில் நடித்த எல்லாருக்கும் நன்றி தெரிவித்த சிம்பு கவுதம் மேனன் பெயரை கடைசி வரை சொல்லவே இல்லை. நடிகை பிரியா பவானி சங்கர் மட்டுமே பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கவுதம் மேனன் இந்த படத்திற்காக போட்ட முயற்சிகளை பற்றி பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











