»   »  சிம்பு கேட்டதால் பஞ்சாயத்து பண்ண வந்த ரஜினி: முகத்தை திருப்பிக் கொண்ட நயன்தாரா

சிம்பு கேட்டதால் பஞ்சாயத்து பண்ண வந்த ரஜினி: முகத்தை திருப்பிக் கொண்ட நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் வைத்து நயன்தாரா, சிம்பு இடையேயான பஞ்சாயத்து விஷயம் பேசப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு நேற்று பலூன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு சினிமா பிரபலங்கள் போன்று நடித்துக் காட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதற்காக அவர்களுக்கு உடையும் அளிக்கப்பட்டது.

ஹரிஷ்

ஹரிஷ்

ஹரிஷ் கல்யாண் சிம்புவாகவும், பிந்து நயன்தாராவாகவும், கணேஷ் அஜீத்தாகவும், ஆரவ் ரஜினியாகவும், சினேகன் ராமராஜனாகவும் நடிக்குமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

சிம்பு

சிம்பு

ஹரிஷ் சிம்புவாகவே மாறிவிட்டார். அந்த பிரச்சனையை நயன்தாராவுடன் பேசித் தீர்க்க முயன்றார். நயன்தாராவோ நான் உன்னுடன் பேச விரும்பவில்லை என்று முகத்தில் அடித்தது போன்று கூறிவிட்டார்.

ரஜினி

ரஜினி

ரஜினி கெட்டப்பில் இருந்த ஆரவிடம் தனக்கும், நயனுக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு சிம்பு கூறினார். ரஜினி பஞ்சாயத்து பண்ண வந்தபோதிலும் நயன்தாரா ஒத்துழைக்கவில்லை.

டான்ஸ்

டான்ஸ்

குட்டி மேடையில் குட்டிப் பிசாசு பாடலுக்கு செம ஆட்டம் ஆடினார் சிம்பு. அதை பார்த்த நயன்தாரா கோபத்தை எல்லாம் மறந்து இம்பிரஸாகி சிம்புவை பாராட்டினார்.

கடுப்பு

கடுப்பு

ஏன்யா பிக்கு பாஸ், உனக்கு எங்க அண்ணன் சிம்பு தான் கிடைச்சாரா என்று சிம்பு ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். சும்மா இருப்பவரை ஏன்யா வம்புக்கு இழுக்கிறீங்க என்று கேட்டுள்ளனர்.

English summary
Harish Kalyan did an excellent job by acting as Simbu. He even danced well and impressed fellow contestants in the Bigg Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil