கேஜிஎஃப் டீமில் இணைகிறாரா சிம்பு ?...என்னங்க இப்படி சர்ப்ரைஸ் கொடுக்குறீங்க?

சென்னை : நீண்ட இடைவேளைக்கு பிறகு டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தின் வழியாக கோலிவுட்டிற்கு கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படம் 100 நாட்களை கடந்து, 100 கோடிக்கும் அதிகமான வசுல் பெற்றது.

மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிம்பு நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. மாநாடு படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அடுத்ததாக சிம்பு நடித்து வந்த பத்து தல படமும் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளது. அப்பா டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள சிம்பு, திரும்பி வந்ததும் இம்மாத இறுதியில் பத்துதல ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

பத்து தல ரிலீஸ் பிளான் இதுவா

பத்து தல ரிலீஸ் பிளான் இதுவா

கெளதம் கார்த்தி, பிரியா பவானிசங்கருடன் சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் ஷுட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை டிசம்பர் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

கேஜிஎஃப் டீமில் சிம்புவா

கேஜிஎஃப் டீமில் சிம்புவா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, கேஜிஎஃப், கேஜிஎஃப் 2, சாலர் படங்களை தயாரித்த ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பான் இந்தியன் ஹிட் டைரக்டர் சுதா கொங்கரா தான் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா ஒரு படத்தை இயக்க போவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

அதுவும் இவர் இயக்கத்திலா

அதுவும் இவர் இயக்கத்திலா

இந்த படத்தில் நடிப்பதற்காக தான் சிம்புவிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சுதா கொங்கரா, சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கி வருவதால் இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் வேலைகளை சுதா துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னங்க இப்படி சர்ப்ரைஸ் கொடுக்குறீங்க

என்னங்க இப்படி சர்ப்ரைஸ் கொடுக்குறீங்க

சூர்யாவுடன் மற்றொரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும், இது முந்தைய படமான சூரரைப் போற்று படத்தை விட இன்னும் வலுவான சப்ஜெக்டாக இருக்கும் என ஏற்கனவே சொல்லி விட்டார். இது பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் 2024 ல் துவங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம் ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதா காங்கரா இயக்க போகும் படத்தில் சூர்யா தான் நடிக்க போகிறார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில தற்போது சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் குழப்பமடைந்தாலும் குஷியாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X