Don't Miss!
- News
"கேட்டுச்சா".. பாஜக வாயே திறக்கலயே.. வேங்கைவயல் விஷயத்தில் ஏன் ஒருத்தரும் கைதாகல? சீறும் திருமாவளவன்
- Lifestyle
உங்க ழுழங்காலில் இந்த அறிகுறிகள் இருந்தா... அது ஆபத்தானதாம்...உங்களால நடக்க முடியாம கூட போகலாமாம்!
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
எம்ஜிஆர், சிவாஜி, கமல், விஜய் வரிசையில் சிம்பு..... கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்....
வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிம்புவின் கலைச்சேவையை பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை இன்று வழங்கியது. இயக்குநர், நடிகர், இசைமைப்பாளர் என பன்முக திறமை கொண்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் சிலம்பரசன் சினிமா துறையில் பன்முக திறமைக் கொண்ட நடிகர் ஆவார். கலைமாமணி விருது பெற்ற அவர் தற்போது டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
Recommended Video

பீஸ்ட் படத்தில் விஜய்யின் அந்த சூப்பர் ஹிட் பாடல் இடம்பெறுகிறதா?

கௌரவ டாக்டர் பட்டம்
உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.

வேல்ஸ் பல்கலைக்கழகம்
அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, கவுரவ டாக்டர் ' பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது. தரமான கல்வியை வழங்கிவரும் 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பலருக்கும் இது போல் 'கவுரவ டாக்டர்' பட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இன்று காலை 10-30 மணி அளவில் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இந்த விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்தப்பணியில் மத்திய அரசு கவனம் செலுத்துவதால் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என கூறப்படுகிறது. பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் அனைவருக்கும் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

பட்டம் பெற்றார் சிலம்பரசன்
பட்டம் பெறுவதற்காக பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்ட சிலம்பரசன் அதற்குரிய உடையை அணிந்திருந்தார். அவரை மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்று மேடையில் அமரவைத்தனர். சிலம்பரசன் அல்லாமல் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

ஐசரி கணேஷ் சிலம்பரசன் குறித்து பதிவு
நடிகர் சிலம்பரசனுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். அந்தவகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.
விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன். நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம்.அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி" என்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார்.

அசாத்திய திறமையுள்ள நடிகர் சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசன் அசாத்திய திறமையுள்ள நடிகர். அஷ்டாவதனி என அழைக்கப்படும் டி.ராஜேந்திர்- உஷா தம்பதியின் மகன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். இன்றைய கதாநாயகர்களில் கூடுதல் அனுபவம் உள்ள நடிகர், சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர். நடிகர்களில் அதிகமான திரைப்பாடல்களை பாடியவரும் சிலம்பரசனே. 120 பாடல்களை அவர் பாடியுள்ளார். அடுத்த இடத்தில் கமல் ஹாசன் 100 பாடல்களை பாடியுள்ளார்.
ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
சிலம்பரசன் சமீபத்தில் நடித்து வெளியான மாநாடு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அதனுடன் சேர்த்து அவருக்கு டாக்டர் பட்டமும் கிடைத்ததில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எம்ஜிஆர், சிவாஜி, கமல், விஜய் போன்றோர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சிலம்பரசனும் இணைந்துள்ளார்.