»   »  விக்ரம் பாணியில் உடலை ஏற்றி இறக்கும் சிம்பு

விக்ரம் பாணியில் உடலை ஏற்றி இறக்கும் சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு தன்னுடைய அடுத்த படத்தில் 90 கிலோ வரை உடல் எடையை அதிகரித்து நடிக்கப் போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் உடல் எடையை ஏற்றி, இறக்கும் நடிகர்களில் விக்ரம், சூர்யா, விஷால் போன்றவர்களுக்கு முக்கிய இடமுண்டு.

Simbu Increase his Body Weight

அதிலும் ஐ படத்தில் விக்ரம் உடல் எடையை சர்வசாதாரணமாக ஏற்றி இறக்கியதைப் பார்த்து, வியப்படையாதவர்களே இல்லை எனலாம்.

இந்நிலையில் நடிகர் சிம்புவும் தற்போது இந்தப் பட்டியலில் இணையப் போகிறார் என, கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் விஜய் சந்தரின் அடுத்த படங்களில் சிம்பு நடிக்கவிருக்கிறார்.

இதில் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் முதன்முறையாக சிம்பு 3 விதமான கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார்.

இதில் ஒரு கெட்டப்பிற்காக தன்னுடைய உடல் எடையை 20 கிலோ அதிகரித்து, 90 கிலோ குண்டுப்பையனாக சிம்பு நடிக்கவிருக்கிறார்.மற்ற இரண்டு கெட்டப்புகளிலும் 60, 70 கிலோ எடை கொண்டவராக மாறி நடிக்கவிருக்கிறார்.

இதற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரிக்கும் முயற்சிகளில் சிம்பு தற்போது இறங்கியிருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன்- சிம்பு முதன்முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Simbu Increase His Body Weight 90Kg For His Next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil