twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழர்களுக்குப் பிரச்னை என்றால் அரசியலுக்கு வருவேன்... சிம்பு அதிரடி!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    அரசியலுக்கு வருவேன்: சிம்பு அதிரடி- வீடியோ

    சென்னை: தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

    நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா வரக்கூடாதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அதிரடி அரசியல் பிரவேசங்களைத் தொடர்ந்து நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

    கமல் கட்சி

    கமல் கட்சி

    ஜெயலலிதா மறைவுக்குப் பின், சினிமா நடிகர்கள் பலரும் அரசியலில் நுழைவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கெனவே, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அடுத்தகட்டப் பணிகளில் மும்முரமாக இறங்கி செயல்பட்டு வருகிறார்.

    அடுத்த என்ட்ரி

    அடுத்த என்ட்ரி

    சூப்பர்ஸ்டார் ரஜினியும் விரைவில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். இவர்கள் மட்டுமின்றி விஜய், விஷால், பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் குதிக்க வாய்ப்பு உள்ளது. இவர்களது செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன.

    டி.ராஜேந்தர் பேச்சு

    டி.ராஜேந்தர் பேச்சு

    அரசியலில் சிம்பு இந்த நிலையில் நடிகர் டி.ராஜேந்தர் வரும் 28-ம் தேதி தனது அரசியல் பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் சிம்புவும் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    மக்கள் முடிவு செய்யவேண்டும்

    மக்கள் முடிவு செய்யவேண்டும்

    "நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது பற்றி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ரஜினி, கமல் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்றும் நான் ஒரு சாதரண நடிகன்" என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

    விரைவில் அறிவிப்பு?

    விரைவில் அறிவிப்பு?

    எனக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என தெரியாமல் விஷால் மீது குறை சொல்ல முடியாது என்று சிம்பு தெரிவித்துள்ளார். ஆக, ரஜினி, கமல் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை நடிகர்களும் அரசியல் களம்காண ஆயத்தமாகிவிட்டனர் என்றே தெரிகிறது.

    English summary
    Simbu said that people should decide whether the actors should come to politics. Simbu also interested to enters politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X