”சிம்பு ரொம்பவே Comfort ஆன ஆளு, அவருகூட ஒர்க் பண்ணிட்டே இருக்கலாம்”: இவரா இப்படி சொல்றாரு?
சென்னை: 'மாநாடு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் பிசியாக இருக்கிறார் சிம்பு.
கெளதம் வாசுதேவ் மேனனுடன் மூன்றாவது முறையாக சிம்பு இணைந்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சிம்பு குறித்து கெளதம் மேனன் பேசிய வீடியோ சிம்பு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

லிட்டில் சூப்பர் ஸ்டார்
குழந்த நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த சிம்புவிற்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விரல்களை சொடுக்கி பஞ்ச் வசனங்கள் பேசியபடி வில்லன்களை பந்தாடும் சிம்புவின் ஆக்சன், எப்பவும் படு தூக்கலாக பட்டையைக் கிளப்பும். அதேபோல், சிறந்த நடிகர், டான்ஸர், சிங்கர் என ஆல் இன் ஆல் மாஸ் காட்டுவதிலும் சிம்பு ஒரு வல்லவன் என்பதே ரசிகர்களின் கருத்து. அதனால் தான் அவரை ரசிகர்கள் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்' என கொண்டாடி வருகின்றனர்.

விண்ணத்தாண்டிய சிம்பு
ஆரம்ப காலங்களில் ஆக்சன் ஜானரில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய சிம்புவிற்கு, சில படங்கள் தோல்வியடைந்தன. ஆனாலும், சிம்புவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சமும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே தான் இருந்தது. வெற்றி தோல்வி என மாறி மாறி பயணித்த சிம்பு, ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார். சிம்பு, த்ரிஷா, கெளதம் வாசுதேவ், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் கூட்டணியில், அந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அச்சம் என்பது மடமையடா
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு, கெளதம் வாசுதேவ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா' படத்தில் இணைந்தது. இந்த முறை பரபரக்கும் ஆக்சன் திரில்லருடன் ரசிகர்களை பரவசப்படுத்தினர். திரும்பவும் இக்கூட்டணியில் படம் எப்போது வரும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்தனர். இதனிடையே, சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாநாடு' மெகா ஹிட் அடித்தது.

அடுத்தடுத்து காத்திருக்கும் அதிரடி
'மாநாடு' படத்திற்குப் பின்னர் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி கெளதம் வாசுதேவ் உடன் ‘வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்தார் சிம்பு. அதேபோல் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்குமே இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருவதால், ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
Recommended Video

செப்டம்பரில் திருவிழா
இந்நிலையில், கெளதம் - சிம்பு - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு' செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இதனிடையே, சிம்பு குறித்து பேசியுள்ள கெளதம் மேனன், "சிம்பு ஒரு கம்ஃபர்ட்டான ஆளு, அவரு கூட ஒர்க் பண்றதா இருந்தா எவ்ளோனாலும் ஒர்க் பன்ணலாம்" என சூப்பர் சர்டிஃபிக்கேட் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த சிம்பு ரசிகர்கள், இந்தக் கூட்டணி மீண்டும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் 2ம் பாகத்தில் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











