கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய சிம்பு,.. காத்திருந்த இயக்குநர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

சென்னை: நாளை சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களைத் தொடர்ந்து பத்து தல படமும் சிம்புவுக்கு சூப்பர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்து இன்னும் அறிவிப்பு வராத நிலையில் அவர் அதிக சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 சிம்புவின் பிறந்தநாள்

சிம்புவின் பிறந்தநாள்

நடிகர் சிம்பு நாளை தனது 40வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலில் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமான சிம்பு, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். கடந்த சில வருடங்களாக லைம் லைட்டில் இல்லாமல் இருந்த சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் செம்ம மாஸ்ஸாக கம்பேக் கொடுத்தார். இந்நிலையில் சிம்பு நாளை பிறந்தநாள் கொண்டாடவிருப்பதால், பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்படுகிறது.

 அடுத்த படம் அப்டேட்?

அடுத்த படம் அப்டேட்?

ஏஆர் ரஹ்மான் இசையில் அவரே பாடியுள்ள நம்ம சத்தம் என்ற பாடல் நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பத்து தல ஷூட்டிங் முடிந்த நிலையில், சிம்பு அடுத்து எந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார், கெளதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 சம்பளத்தை உயர்த்திய சிம்பு

சம்பளத்தை உயர்த்திய சிம்பு

அதேபோல், மேலும் சில இயக்குநர்களிடமும் சிம்பு கதை கேட்டு வருகிறாராம். ஆனால் இதுகுறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதனிடையே தான் சிம்பு தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகிறது. சிம்புவின் படங்களுக்கு ரசிகர்களிடம் மீண்டும் நல்ல வரவேற்பு கிடைப்பதால், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. அதனால், ஒரு படத்திற்கு 40 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவை வைத்து படம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்த வரும் தயாரிப்பாளர்களிடம் அவரது தாயார் உஷா ராஜேந்தர் சம்பளம் 40 கோடி வரை கேட்டு ஷாக் கொடுத்து வருகிறாராம்.

 அதிர்ச்சியில் இயக்குநர்கள்

அதிர்ச்சியில் இயக்குநர்கள்

இதனால் சிம்புவிடம் கதை சொல்லப் போகும் இயக்குநர்கள் அதிர்ச்சியோடு திரும்பி வருகிறார்களாம். மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்தது நியாயமானதாக இருந்தாலும், 40 கோடி ரூபாய் சம்பளத்தை யாருமே எதிர்பார்க்கவில்லையாம். இரண்டு படங்கள் ஹிட் கொடுத்ததும் ஒரேயடியாக இப்படி சம்பளத்தை உயர்த்தலாமா எனவும் கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறதாம். ஆனால், இதெல்லாம் உண்மையில்லை என்றும் சிம்பு தனது சம்பளத்தை உயர்த்தவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. அதேபோல் அவரின் அடுத்த படம் பற்றியும் தகவல் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X