»   »  பாலாவின் அடுத்த டார்கெட் சிம்பு ‘தலை’..?

பாலாவின் அடுத்த டார்கெட் சிம்பு ‘தலை’..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேது, பிதாமகன், நந்தா, நான் கடவுள் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் பாலா. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும், தேசிய விருது பெற்றவருமான இவர், கடைசியாக சசிகுமாரை நாயகனாக நடிக்க வைத்து தாரை தப்பட்டை படத்தை இயக்கியிருந்தார்.


இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அடுத்ததாக குற்றப்பரம்பரை கதையை இயக்க திட்டமிட்டார். ஆனால், இந்தப் படம் தொடர்பாக அவருக்கும், இயக்குநர் பாரதிராஜாவுக்கும் இடையே பிரச்சினை உருவானது.


நட்சத்திரப் பட்டாளம்...

நட்சத்திரப் பட்டாளம்...

பின்னர், அந்தப் பட வேலையை ஒத்தி வைத்த பாலா, அடுத்ததாக பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து புதிய படம் இயக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது. இப்படத்தில் ஆர்யா, விஷால், ராணா, அதர்வா உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.


சிம்புவுடன் கூட்டணி...

சிம்புவுடன் கூட்டணி...

இந்நிலையில், தற்போது அப்படத்தையும் தள்ளி வைத்துவிட்டு, சிம்புவுடன் கை கோர்க்க பாலா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

பொதுவாக பாலா படம் என்றாலே நாயகர்களின் ஹேர்ஸ்டைல் மற்றும் உடை பிரபலமானது. ஒன்று பரட்டைத் தலையுடன் உலா வருவர், இல்லையென்றால் ஒட்ட வெட்டிய முடியுடன் திகில் கிளப்புவர். அதோடு அழுக்குப் படிந்த மனிதர்களாக நாயகர்களை அடையாளம் தெரியாமல் மாற்றி விடுவதில் வல்லவர் பாலா. அந்தவகையில் இந்தப் புதிய படத்திற்காக சிம்பு எப்படி மாறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி விட்டது.


விரைவில் ரிலீஸ்...

விரைவில் ரிலீஸ்...

தற்போது சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த, ‘அச்சம் என்பது மடமையடா' படம் இம்மாத இறுதியில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


English summary
Now a buzz is doing the rounds that the National Award winning director Bala is in talks with Simbu to head the cast of his next which will begin shooting as soon as the latter finishes his ‘Anbanavan Adangadhavan Asaradhavan’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X