சிம்பு கிட்ட இப்படியொரு திறமை இருக்கா.. வெளிச்சத்துக்கு கொண்டு வந்த லாக்டவுன்.. குவியுது பாராட்டு!

சென்னை: இந்த லாக்டவுனில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களின் பல திறமைகளை ஒவ்வொன்றாக வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

Recommended Video

Simbu Positive Story : ரசிகருக்கு தைரியம் கொடுத்த சிம்பு.

சமையல் அறை வீட்டில் எங்கே இருக்கும் என்பதே தெரியாத பல நடிகைகள், டல்கோனா காஃபி முதல் வித விதமன டிஷ்களை செய்து அசத்தி வருகின்றனர். கொஞ்சம் வெறுப்பையும் ஏற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தங்களிடம் இருக்கும் சமயல் மாஸ்டரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேக் கொண்டு வர இந்த லாக்டவுன் ரொம்பவே உதவியாய் இருந்து இருக்கிறது.

சகலகலா வல்லவன்

சகலகலா வல்லவன்

சிறு வயது முதலே நடித்து வரும் நடிகர் சிம்பு, நடிப்பு, நடனம், பாடல், இசை, இயக்கம் என சினிமாவில் ஏ டு இசட் என அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் என்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும். அந்த சகலகலா வல்லவனுக்கு சமயலும் கை வந்த கலை என்பதை இந்த லாக்டவுன் வெளிப்படுத்தி இருக்கிறது.

அம்மாவுக்கு ரெஸ்ட்

அம்மாவுக்கு ரெஸ்ட்

அன்னையர் தினத்தன்று மட்டும் அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுக்காமல், இந்த லாக்டவுன் முழுவதுமே தனது அம்மா உஷாவுக்கு நடிகர் சிம்பு சமையலில் ஓய்வு கொடுத்துள்ளார் என்றும், தனது தந்தையும் பிரபல நடிகருமான டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷாவுக்கு வீட்டில் தினமும் வித விதமான உணவுகளை சமைத்து போட்டு அசத்தி வருகிறாராம்.

ஸ்பெஷல் உணவு

ஸ்பெஷல் உணவு

நடிகர் சிம்புவுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது பிரியாணி தானாம். இந்த லாக்டவுன் நேரத்தில் வெரைட்டி வெரைட்டியாக பிரியாணி சமைத்து அசத்தி வருகிறாராம். மேலும், ஏகப்பட்ட சமையலை சமைத்துக் கொடுத்து வரும் சிம்புவின் புகைப்படங்கள் சீக்கிரமே சமூக வலைதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒர்க்கவுட்

ஒர்க்கவுட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி மாதம் போடப்பட்டது. படத்தின் ஷூட்டிங், தொடங்க இருந்த நிலையில் லாக்டவுன் ஏற்பட்டதால், ஷூட்டிங் அப்படியே நிறுத்தப்பட்டது. மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைத்து வரும் சிம்பு வீட்டிலேயே கடுமையான ஒர்க்கவுட்டையும் செய்து வருகிறார்.

இரண்டுமே எப்படி

இரண்டுமே எப்படி

சுவையான உணவுகளை சமைத்து பெற்றோர்களுக்கு தினமும் பரிமாறி வரும் நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்தும் வருவது எப்படி? என அவரது ரசிகர்களும், மாநாடு படக்குழுவும் ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறது. என்ன தான் சூப்பரா உணவு சமைத்தாலும், தேவையான அளவுக்கு மேலே சிம்பு சாப்பிடமாட்டாராம். அது தான் அவரது ஃபிட்னஸுக்கான ரகசியமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X