அந்த ஆளை மட்டும் விட்டுடுங்க, அவர் ரொம்ப நல்லவர்: கெஞ்சிய ஓவியா
சென்னை: உண்மையில் சிம்பு எப்படிப்பட்ட ஆள் என்பது குறித்து தெரிவித்துள்ளார் நடிகை ஓவியா.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் டிவியில் அழகிய ஓவியா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டார். ஓவியா ஆர்மிக்காரர்களும் கலந்து கொண்டு அவரிடம் கேள்விகள் கேட்டனர்.
ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஓவியா பதில் அளித்தார்.

பாசம்
நான் வேறு ஒரு ஊரில் இருந்து வந்தும் என்னை தமிழ்நாட்டில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டதை இந்த மாநிலத்தில் மட்டும் தான் பார்த்துள்ளேன். இங்க பாசம் வைத்தால் அதிகமாக வைக்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக உள்ளது என்றார் ஓவியா.

மன அழுத்தம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மன அழுத்தமாக இருந்தது. அப்போது என் ரசிகர்களை தவிர வேறு யாரும் இல்லை. அவர்களின் ஆதரவால் தான் மீண்டும் பழையபடி நன்றாக ஆகியுள்ளேன் என்று ஓவியா தெரிவித்தார்.

ரசிகர்கள்
ரசிகர்கள் முதலில் அவர்களின் வாழ்க்கையை கவனிக்க வேண்டும். அதன் பிறகு தான் மற்றவர்கள். ரசிகர் ஒருவர் என் பெயரை தனது கையில் பச்சை குத்தியதை என்னால் மறக்கவே முடியாது என்று ஓவியா கூறினார்.

சின்சியர்
மற்றவர்கள் சொல்வது மாதிரி இல்லை. சிம்பு ரொம்ப கடின உழைப்பாளி. சிம்பு மாதிரி ஒரு சின்சியரான ஆர்டிஸ்டை நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை என்றார் ஓவியா.

வளர்ச்சி
நீங்க இருக்க வேண்டிய இடம் இது இல்லை. இன்னும் நிறைய லெவல் தாண்டி போக வேண்டி உள்ளது சிம்பு. அந்த ஆளை மட்டும் விட்டுடுங்க. அவர் ரொம்ப நல்லவங்க என்று ஓவியா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











