Exclusive: நடிகர் சங்கத் தேர்தல்... விஷாலுக்கு எதிராக சிம்பு... ஆர்.கே.சுரேஷின் பக்கா பிளான்!

Recommended Video

Actor RK Suresh Interview: விஷால் தனிப்பட்டு இருக்கறதுனாலதான் எங்களுக்கு கோவமே!- வீடியோ

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக பல நடிகர்கள் ஒன்று சேர்ந்திருப்பதாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்தமுறை நடிகர் சங்கத் தேர்தலின் போது, சரத்குமார் அணிக்கு எதிராக விஷால் அணி களமிறங்கியது. இதனால் அத்தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. தேர்தலில் விஷால் அணி வெற்றியும் பெற்றது. ஆனால், வெற்றிக்குப் பின் விஷால் அணியும் சர்ச்சைகளில் சிக்கியது. அந்த அணியில் இருந்தவர்களே அதிருப்தியால் விஷாலுக்கு எதிரானார்கள்.

இந்நிலையில், விரைவில் மீண்டும் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், விஷால் அணியை எதிர்த்து மீண்டும் சரத்குமார் அணி போட்டியிட இருக்கிறது.

நடைபெற உள்ள தேர்தலில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், விஷாலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்தப் பரபரப்பான சூழலில் ஒன் இந்தியாவிற்காக ஆர்.கே.சுரேஷை சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது:-

ஜே.கே.ரித்தீஷ்:

ஜே.கே.ரித்தீஷ்:

"கடந்த முறை நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக தான் நாங்கள் அனைவரும் வேலை பார்த்தோம். இதில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ஜே.கே.ரித்தீஷ். பின்னர் சில பிரச்சினைகளின் காரணமாக விஷாலுக்கு எதிராக அவர் செயல்பட்டார். துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். இருந்தாலும் அவரது எண்ணம் நிறைவேறும் வகையில் விஷாலுக்கு எதிராக நாங்கள் அணி திரட்டி வருகிறோம்.

இது தான் காரணம்:

இது தான் காரணம்:

விஷால் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது. என்னுடைய படத்தின் ரிலீசுக்கு அவர் உதவவில்லை என்பதெல்லாம் எனக்கு பிரச்சினையே இல்லை.ஏனென்றால் நான் ஏகப்பட்ட படங்களை ரிலீஸ் செய்தவன். ஆனால் விஷால் யாரையும் மதிக்காமல், தனிப்பட்ட முறையில் இயங்குவது தான் எங்களுடைய கோபத்துக்கு காரணம். அவர் எல்லோரையும் பகைத்துக் கொண்டுவிட்டார்.

சரியான தேர்வு:

சரியான தேர்வு:

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக நடிகை ராதிகா களமிறங்கினால் நிச்சயம் எங்களுடைய ஆதரவு அவருக்கு உண்டு. ஏனென்றால், நடிகர் சங்கத்தில் அவர் மூத்த உறுப்பினர். சினிமா துறையில் நிறைய அனுபவங்களைப் பெற்றவர். அவர் ஒரு சரியான தேர்வாக இருப்பார்.

சிம்புவுக்கு ஆதரவு:

சிம்புவுக்கு ஆதரவு:

இந்த தேர்தலில் சிம்புவின் ஆதரவு எங்களுக்கு 200 சதவீதம் உள்ளது. ஏற்கனவே நாங்கள் தொலைபேசியில் ஆலோசித்துவிட்டோம். இன்னும் நிறைய நடிகர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவித்தப் பின்னர் அதுகுறித்து முழுமையாக தெரிவிப்போம்". இவ்வாறு ஆர்.கே.சுரேஷ் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X