தனுஷ் உடன் நடிக்க விடாமல் சதி செய்த சிம்பு!
சென்னை: சிம்பு மற்றும் தனுஷ் தமிழ் சினிமாவில் போட்டி போட்டு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்
கெளதம் வாசுதேவ் மேனனுடன் மூன்றாவது முறையாக சிம்பு இணைந்து இப்பொழுது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார்
அசுரத்தனமான நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிக்காட்டி சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வரும் தனுஷ் உடன் நடிகர் சந்தானத்தை நடிக்க விடாமல் சிம்பு சதி செய்ததாக பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார்.

நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகிறார்
அசுரன்,கர்ணன் என ராவான படங்களை கொடுத்த தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இவை கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார். அந்த படத்திற்கு வாத்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.அதைத் தொடர்ந்து யாரடி நீ மோகினி பட இயக்குனர் ஜவகர் இயக்கத்தில் திருசிற்றம்பலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

உடல் எடையை குறைத்து
ஈஸ்வரன் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு மாநாடு என்ற பிளாக்பஸ்டர் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். முன்பு இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் மாநாடு படத்தில் நடித்திருப்பார். டைம் லூப் பாணியில் உருவான இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா,அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து சிம்பு மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் உடல் எடையை குறைத்து சிம்பு இதில் நடித்து வருகிறார்

நிஜ வாழ்க்கையிலும் போட்டியாளர்களாக
சிம்பு மற்றும் தனுஷ் தமிழ் சினிமாவில் சமகாலத்தில் அறிமுகம் ஆனதால் இருவரும் திரையுலகில் போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். திரைத்துறையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இருவரும் போட்டியாளர்களாக இருக்கின்றனர் என அவ்வப்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தனுஷ் உடன் நடிகர் சந்தானத்தை நடிக்க விடாமல் சிம்பு சதி செய்ததாக பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி ஷாக்கிங் தகவலை பகிர்ந்துள்ளார்

சந்தானத்தை நடிக்க வேண்டாம்
அதில் அவர் கூறியதாவது ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக அறிமுகமான 3 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க சந்தானம் தான் ஒப்பந்தமாகி இருந்தாராம். ஆனால் சிம்பு சந்தானத்தை 3 படத்தில் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டாராம் .

சந்தானத்திற்கு பதில் சிவகார்த்திகேயன்
சந்தானமும் சிம்புவின் பேச்சைக்கேட்டு கடைசி சமயத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறி ஒதுங்கி விட்டாராம். கடைசி நேரத்தில் சந்தானம் நடிக்க வராததால் சந்தானம் போல் விஜய் டிவியில் இருந்து புகழ்பெற்ற சிவகார்த்திகேயனை 3 படத்தில் காமெடியனாக தனுஷ் ஒப்பந்தம் செய்ததாக பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி ஷாக்கிங் தகவலை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











