ஆரம்பிக்காத அரசன்.. முந்திக் கொண்ட மூத்த இயக்குநர்.. சிம்புவுக்கு ஒரே யோகம்தான் போங்க
சென்னை: நடிகர் சிம்பு தற்போது தனது 49 வது படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இருக்கிறார். இது மட்டும் இல்லாமல், வெற்றி மாறன் இயக்கத்தில் அவர் கமிட் ஆகியுள்ள படமான அரசன் படத்தின் அறிவிப்பு வீடியோ ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரசன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்காத நிலையில், மூத்த இயக்குநர் ஒருவர் சிம்புவுக்கு கதை சொல்லி, ஓ.கேவும் வாங்கிவிட்டாராம்.
STR , சிம்பு என ரசிகர்களால் கொண்டாடப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் சிலம்பரசன். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்கள் எடுத்து வெற்றி கண்ட டி. ராஜேந்தரரின் மூத்த மகன். வெறும் 1 வயது சிறுவனாக 1984-ல் தந்தையின் படம் உறவை காத்த கிளியில் அறிமுகமானார். அடுத்து தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம் போன்ற படங்களில் குழந்தை கலைஞராக நடித்தார். 2002-ல் காதல் அழிவதில்லையில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை இவரது அப்பா டி. ராஜேந்தர் இயக்கினார்.

சிம்பு: நடிகராக மட்டும் இல்லாமல், பாடலாசிரியராகவும், பாடகராகவும் கலக்கி வருகிறார். இதில் சிம்பு 90-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பிளேபேக் சிங்கராக குரல் கொடுத்துள்ளார், குறிப்பாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு அதிகப்படியான எடை இருந்ததை கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுகள் என தனது எடையை 105 கிலோவிலிருந்து 70 கிலோவாக குறைத்தார்.

ஏ.ஆர். முருகதாஸ்: கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம், தக் லைஃப். இந்த படம் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியானது. ஆனால் படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வி படமாக மாறியது. சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகவுள்ள படமனா அரசன் படத்தின் ப்ரோமோ வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் மறைந்த மயிலை சேகரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நாள் ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருப்பதால், இந்த கால இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிம்புவை சந்தித்து கதை சொல்லி உள்ளாராம். அந்த கதை சிம்புவுக்கும் பிடித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











