Simbu: “தயாரிப்பாளர் மட்டும் இல்ல... சிம்புவுக்காக கமல் எடுத்த முடிவு..” STR 48-ல் தரமான சம்பவம்!
சென்னை: சிம்புவின் 48வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். எஸ்டிஆர் 48 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் எஸ்டிஆர் 48 படம் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன.
சிம்புக்காக கமல் எடுத்த முடிவு: மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் கம்பேக் வெறித்தனமாக உள்ளது. சமீபத்தில் அவரது பிறந்தநாளில் வெளியான எஸ்டிஆர் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றே அதற்கு சிறந்த உதாரணம் ஆகும். தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் பீரியட் ஜானரில் உருவாகும் எஸ்டிஆர் 48, பாகுபலியை விட பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. சிம்புவுக்காக கமலே இந்தப் படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது கமல் - சிம்பு கூட்டணி இணையும் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் எஸ்டிஆர் 48 படத்தின் பட்ஜெட் ரொம்பவே அதிகம் என்பதால், ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தேசிங் பெரியசாமி. சிம்புவும் இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், மிருணாள் தாகூர் நடிப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் உலக நாயகனும் இணையவுள்ளதாக தற்போது சொல்லப்படுகிறது.
மிக முக்கியமான கேமியோ ரோலில் கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என தேசிங் பெரியசாமி முடிவு செய்துள்ளார். இதற்கு உலக நாயகனும் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. தம்பி சிம்புவுக்காக தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் கேமியோ ரோலிலும் நடித்துக் கொடுக்க ரெடியாகிவிட்டார் கமல்ஹாசன். இதனையடுத்து எஸ்டிஆர் 48 படத்துக்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
முன்னதாக கேஜிஎஃப் பிரபலம் ரவி பஸ்ரூர் தான் எஸ்டிஆர் 48 படத்துக்கு இசையமைக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் கமிட்டாக வாய்ப்புள்ளது. இதுதவிர எஸ்டிஆர் 48ல் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்தும் விரைவில் அப்டேட் வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது. அதேபோல் படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரம் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











