Simbu: “ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்... அவசரமாக தாய்லாந்து பறந்த சிம்பு..” பரபரக்கும் STR 48 ஸ்பாட்!

சென்னை: சிம்பு தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். அதன்படி தேசிங் பெரியசாமி இயக்கும் எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. இந்நிலையில் எஸ்டிஆர் 48 படத்தின் ஷூட்டிங் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

பரபரக்கும் STR 48 ஸ்பாட்
சிம்புவின் 48வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் இயக்குநரானவர் தேசிங் பெரியசாமி. முதல் படத்திலேயே கதை, திரைக்கதை, மேக்கிங், டைரக்‌ஷன் என அனைத்திலும் மாஸ் காட்டியிருந்தார். இதனால் தனது அடுத்தப் படத்திற்கான கதையை சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து கூறினார். ஆனால், அவரால் நடிக்க முடியாமல் போக, தற்போது அதில் சிம்பு கமிட்டாகியுள்ளார்.

 Simbu: Keerthy Suresh joined STR 48... Simbu flew to Thailand for shooting


அப்படி உருவாகும் எஸ்டிஆர் 48 படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்காக பல மாதங்களாக ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை பார்த்து வருகிறார் தேசிங் பெரியசாமி. அதேபோல் சிம்புவும் இந்தப் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வந்தார். இதற்காக அவர் பாங்காங், லண்டன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருகட்டத்தில் எஸ்டிஆர் 48 படம் ட்ராப் ஆகவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்புவின் பிறந்தநாளில் எஸ்டிஆர் 48 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இதில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பது கன்ஃபார்ம் ஆனது. ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களிலும் சிம்புவே நடிக்கவுள்ளார். இதனையடுத்து இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

அதில் கீர்த்தி சுரேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சைரன் பட விழாவில் அவரே மறைமுகமாக கூறியுள்ளார். இதனால் சிம்பு - கீர்த்தி சுரேஷ் காம்போ முதன்முறையாக இணைகிறது. எஸ்டிஆர் 48 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சிலம்பம் கற்றுக்கொண்டு வருகிறாராம். அதேபோல் இன்னொரு நாயகியாக மிருணாள் தாகூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதுவும் விரைவில் கன்ஃபார்ம் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு அவசரமாக தாய்லாந்து சென்றுள்ளார். விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்தபடி வலம் வந்த சிம்புவின் போட்டோ டிவிட்டரில் ட்ரெண்டாகி இருந்தது. முதற்கட்ட படப்பிடிப்புக்காக தான் சிம்பு தாய்லாந்து சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்புவை தொடர்ந்து எஸ்டிஆர் 48 படக்குழுவினரும் விரைவில் பாங்காங் செல்லவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X