ஏலே.. நான் கண்ணாடி மாதிரில. மிரட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ.. குவியுது லைக்ஸ்!

சென்னை: நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாநாடு, மஹா, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் என அடுத்தடுத்து தனத் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.

வருஷத்துக்கு ஒரு படமாவது வராதா என ஏங்கிய சிம்பு ரசிகர்களுக்கு இப்படி அடுத்தடுத்த அறிவிப்புகளை கொடுத்து குஷிப்படுத்தி உள்ளார்.

ஸ்லிம் சிம்பு

ஸ்லிம் சிம்பு

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அதீத உடல் எடையுடன் நடித்த சிம்புவை பலரும் கேலி செய்தனர். அந்த படமும் படு தோல்வியை சந்தித்தது. மாநாடு படமும் டிராப் ஆனது என ஏகப்பட்ட சர்ச்சைகள் சிம்புவை சுற்றிய நிலையில், அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து சூப்பர் ஸ்லிம் சிம்புவாக ஈஸ்வரன் படத்தில் கம்பேக் கொடுத்தார்.

யாருக்காக தெரியுமா

யாருக்காக தெரியுமா

சிறு வயது முதலே நடித்து வரும் சிம்பு, பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், இசை என பல துறைகளிலும் அசத்தி வந்த நிலையில், சிறிய சறுக்கல் ஏற்படவே பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஆனால், அப்போது கூட சிம்புவை மறந்துவிடாமல் நேசித்த தனது ரசிகர்களுக்காகத் தான் தற்போது மீண்டும் களமிறங்கி டாக் ஆஃப் தி டவுன் ஆகி உள்ளார்.

கண்ணாடி மாதிரி

கண்ணாடி மாதிரி

ஒஸ்தி படத்தில், "ஏலே.. நான் கண்ணாடி மாதிரில" என வசனம் பேசும் சிம்பு எப்போதுமே, கண்ணாடி போலத்தான், நல்லவர்களுக்கு நல்லவனாகவும், கெட்டவனுக்கு கெட்டவனாகவும் இருந்து வருகிறேன் என்பதை வெளிக்காட்டும் விதமாக தற்போது கண்ணாடி முன் நின்று எடுத்துள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

மாநாடுக்கு வெயிட்டிங்

மாநாடுக்கு வெயிட்டிங்

மாநாடு படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் படம் எப்போ ரிலீசாகும் என சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ஹாலிவுட் திரைப்படமான டெனெட் உடன் கம்பேர் செய்யப்பட்ட நிலையில், டிரைலர் அந்த கருத்தை மாற்றும் என இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூரியனாக வரும் சிம்பு

சூரியனாக வரும் சிம்பு

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் 3வது முறையாக சிம்பு இணைகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில், கெளதம் மேனன், சிம்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் மூவரும் இணைந்து நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை உருவாக்க உள்ளனர்.

கல்யாணம் எப்போ

கல்யாணம் எப்போ

வாரணாசிக்கு சென்று வேண்டிக் கொண்டு நதியில் விளக்கேற்றிய புகைப்படத்தை சமீபத்தில் சிம்பு ஷேர் செய்திருந்தார். மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு தனது செல்ல நாய்க்குட்டியுடன் சிம்பு கல்யாணம் பற்றி பேசியது செம வைரலானது. படு தீவிரமாக சிம்புவுக்கு பெண் பார்த்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. வெகு சீக்கிரமே சிம்புவின் திருமண அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X