ரோலக்ஸ் கேரக்டருக்கு ஸ்கெட்ச் போடும் சிம்பு... லோகேஷ் கனகராஜ்ஜின் Plan B... விக்ரம் 2 அப்டேட்!
சென்னை: கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பத்து தல ஹீரோ சிம்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசியிருந்தார்.
ஏற்கனவே கமலின் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த சிம்பு, தற்போது லோகேஷ் குறித்து பேசியதன் பின்னணி பற்றி தெரியவந்துள்ளது.

பத்து தல பிரஸ் மீட்
சிம்புவின் பத்து தல திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில், சிம்பு, பிரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக், இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஸ்டுடீயோ க்ரீன் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

லோகேஷை பாராட்டிய சிம்பு
சிம்பு, கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், டிஜே என மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ளது பத்து தல. இதனை குறிப்பிட்டு பேசிய சிம்பு, பத்து தல மல்டி ஸ்டார் படமாக உருவானாலும் எல்லோருக்கும் சமமான வாய்ப்புகளை கொடுத்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணா. லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உட்பட எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது என பேசியிருந்தார்.

ரோலக்ஸ் கேரக்டரில் சிம்பு
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் இருதினங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. விக்ரம் படத்தைப் போல லியோவிலும் விஜய்யுடன் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. லியோ படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் கைதி இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். அதன்பிறகு விக்ரம் செகண்ட் பார்ட் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சிம்பு விரும்புவதாக தெரியவந்துள்ளது.

லோகேஷின் Plan B
விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவருக்கும் கமலுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதன்படி தற்போது சிம்புவின் STR 48 படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் கமல் - லோகேஷ் கூட்டணியில் விக்ரம் செகண்ட் பார்ட் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரில் சிம்பு நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

கமல் க்ரீன் சிக்னல்
விக்ரம் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் வந்து மிரட்டினார் சூர்யா. விக்ரம் இரண்டாம் பாகத்தில் ரோலக்ஸ் கேரக்டர் தான் மெயின் வில்லனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அப்போது சூர்யாவுக்கு கால்ஷீட் இல்லையென்றால் அவருக்குப் பதிலாக சிம்புவை நடிக்க வைக்க கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜ்ஜும் ப்ளான் செய்துள்ளார்களாம். அதை மனதில் வைத்தே பத்து தல ப்ரஸ் மீட்டில் லோகேஷை சிம்பு பாராட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து உண்மையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











