ஆளே மாறிட்டாரே... - விமர்சித்தவர்களுக்கு செயல்பாடுகளால் பதிலடி கொடுக்கும் சிம்பு!
சென்னை : மணிரத்னம் இயக்கும் மல்டி ஸ்டாரர் படத்தில் நடித்து வரும் சிம்பு, தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்திருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
சிம்பு நடிப்பில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்தபோது அவரது உடல் எடை அதிகமாக இருந்தது. அந்தப் படத்தின் தோல்விக்கு சிம்புதான் காரணம் எனக் கூறப்பட்டது. 'அச்சம் என்பது மடமையடா', 'AAA' ஆகிய இரண்டு படங்களிலுமே குண்டான தோற்றத்தில் நடித்தார் சிம்பு. அவரால் வெய்ட்டை குறைக்க முடியவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையே 'காற்று வெளியிடை' படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதியுடன் இணைந்து சிம்புவும் ஒரு நாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
இப்படத்திற்காக ஜிம்முக்குப் போய் தீவிர உடற்பயிற்சியில் இறங்கினார் சிம்பு. ஜிம்மில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. உடல் எடையை 10 கிலோவுக்கு மேல் குறைத்து ஷூட்டிங்குக்கு தயாரானார்.
தற்போது 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் இன்னும் எடை குறைந்து காணப்படுகிறார் சிம்பு. தன் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் செயல்பாடுகளால் பதில் சொல்லி வருகிறார் சிம்பு.


Click it and Unblock the Notifications











