Don't Miss!
- Lifestyle
உங்க கணவன் & மனவிகிட்ட இந்த மோசமான பழக்கம் இருந்தா...நீங்க நரகத்துல மாட்டிகிட்டீங்கனு அர்த்தமாம்!
- News
முதல்வரே ! கோடநாடு அரக்கன்.. கண்முன் நிழலாடும் களவாணியை பிடிங்க.. யாரை சொல்கிறார் இந்த அழகு!
- Sports
அடிக்கனும்னு நினைச்சா அடிச்சிடனும்.. சாதனை சதத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் மாஸ் பேச்சு
- Technology
அடேங்கப்பா..இவ்வளவு அட்டகாசமான அம்சங்கள் இருக்குதா? Nokia T10 டேப்லெட் விரைவில் அறிமுகம்.!
- Finance
வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சோமேட்டோ..!
- Automobiles
எலெக்ட்ரிக் வண்டிகளின் சேல்ஸ் அதிகம் ஆகணுமா? இத பண்ணுங்க! எல்லாரும் எதிர்பாக்கும் விஷயத்தை சொன்ன கர்நாடக சிஎம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சிம்பு வீட்டின் முன் போராட்டம் நடத்திய சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதி..என்ன ஆச்சு?
சென்னை : தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்த நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி என்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களில் நடித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
இது
கண்
ஆஸ்பத்திரி
கதிரேசா..
விஜய்யின்
'வாரிசு’
ஃபர்ஸ்ட்
லுக்
எங்கிருந்து
சுடப்பட்டது
தெரியுமா?

வாய் கொடுத்து மாட்டிக்கொண்டார்
பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் ஸ்ரீநிதி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வந்தார். இதனால், எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தார். திறமையான நடிகையான இவர் சமீபத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் குறித்து ஏடாகூட கருத்தை தெரிவித்து வம்பில் மாட்டிக்கொண்டார். இதனால் அஜித் ரசிகர்கள் இவரை கண்டபடி திட்டித் தீர்த்தனர். அங்கிருந்து தான் ஸ்ரீநிதிக்கு பிரச்சனை தொடங்கியது.

சிம்பு என்னை காதலிக்கிறார்
இதையடுத்து, சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். மேலும், நான் சிம்புவை காதலிக்கவில்லை என்றும். சிம்பு தான் என்ன லவ் பன்றாரு என்று கூறி இருந்தார். அது மட்டும் இல்லாமல். சிம்பு தன்னை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ள போவதாக சிம்பு வீட்டுக்கு முன்பு சென்று தர்ணா செய்தார்.

மனதளவில் பாதிப்பு
அதுமட்டும் இல்லாமல், நெருங்கிய தோழி நட்சத்திராவைப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், நட்சத்திரா ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்து இருக்கா, அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்து இருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது என்று பதிவிட்டுவிட்டு பின்னர் அதை டெலிட்டும் செய்திருந்தார்.

மடியில் உட்கார சொன்னார்
ஸ்ரீநிதி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பட வாய்ப்பு தருவதாக கூறி பிரபல சேனலில் பெரிய பதவியில் இருக்கும் நபர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் கூறியிருந்தார். அது பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து, ஸ்ரீநிதியின் அம்மா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் அவர் விரைவில் குணப்படுத்திவிடுவேன் என்ற கூறியிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், ஸ்ரீநிதி சென்னை புறநகரான புழல் பகுதியில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கவுன்சிலிங் நிச்சயம் அவருக்கு மாற்றத்தை தரும் என்பதால் அங்கே தங்கி கவுன்சிலிங் எடுத்துக்கொள்கிறார் என்றும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அவரது நண்பர்கள் கூறியதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.