கமல் மட்டும் எப்படி பேசலாம், நானும் பேசுவேன்: உண்ணாவிரத பந்தலில் சிம்பு அடம்
சென்னை: கடந்த 2ம் தேதி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோலிவுட் நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது சிம்புவால் தான் கமல் ஹாசன் வாய் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோலிவுட் நடிகர்கள் கடந்த 2ம் தேதி சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ரஜினிகாந்த், கமல், சரத்குமார், அஜீத் குமார், ராதாரவி உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும், நளினி, மோனிகா, தன்ஷிகா, தேவயானி உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் பந்தலில் யாருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் கமல் மட்டும் பேசுவார் என்று கூறப்பட்டது.

மௌனமாக நடந்த உண்ணாவிரதம்
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ரஜினி, அஜீத் உள்ளிட்ட யாருமே பந்தலில் பேசவில்லை.

அடம் பிடித்த சிம்பு
கமல் மட்டும் பேச அனுமதிக்கிறீர்கள். நானும் தமிழன் தான் நானும் பேசுவேன் என்று ராதாரவியிடம் சிம்பு அடம்பிடித்தாராம். அவர் சிம்புவை சமாதானம் செய்ய முயன்றும் பலனில்லாமல் போனதாம்.

சிம்புவை சமாதானம் செய்த சரத், சத்யராஜ்
பேசியே தீருவேன் என்று அடம்பிடித்த சிம்புவை சரத்குமாரும், சத்யராஜும் சமாதானம் செய்தனராம்.

பேசாமல் போன கமல்
சிம்பு அடம்பிடித்ததால் கமல் உண்ணாவிரத பந்தலில் பேசவில்லையாம்.


Click it and Unblock the Notifications











