Simbu: முதலில் அஜித் அடுத்து சிம்பு... மகிழ் திருமேனியின் நெக்ஸ்ட் டிவிஸ்ட் என்னன்னு தெரியுமா?

சென்னை: மாநாடு வெற்றிக்குப் பின்னர் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் பத்து தல வெளியான நிலையில், அடுத்து எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கு முன்னதாக இயக்குநர் மகிழ் திருமேனியுடன் சிம்பு கூட்டணி வைக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால், மகிழ் திருமேனி தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கவுள்ளதால், அதன்பின்னர் சிம்புவுடன் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Simbu: Magizh Thirumeni Is Expected To Direct A Crime Thriller With Simbu

சிம்புவின் புதிய கூட்டணி: சிம்பு தற்போது தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் நடிக்கவுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. ஆனாலும் எஸ்டிஆர் 48 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென லண்டன் பறந்த சிம்பு, அங்கும் STR 48 படத்துக்காக சில பயிற்சிகள் எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியே இன்னும் முடிவாகாத நிலையில், தனது அடுத்த படத்திற்கும் ரெடியாகிவிட்டார் சிம்பு. பத்து தல வெளியாகும் முன்பே சிம்புவின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி அல்லது ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இவர்களில் மகிழ் திருமேனி தான் சிம்புவின் புதிய பட இயக்குநர் எனக் கூறப்பட்டது. ஆனால், ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதால் எல்லாமே தலை கீழாக மாறியது.

திடீரென அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனியை தேடிவர, சிம்புவும் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துவிட்டாராம். அதன்பின்னரே அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உறுதியானது. இதனால், விடாமுயற்சி முடிந்ததும் நாம் இணையலாம் என சிம்புவுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளாராம் மகிழ் திருமேனி. சிம்புவும் எஸ்டிஆர் 48 படத்தில் கமிட்டானதால் மகிழ் திருமேனி டீலிங்குக்கு ஓக்கே சொல்லிவிட்டாராம்.

 Simbu: Magizh Thirumeni Is Expected To Direct A Crime Thriller With Simbu

அதன்படி, சிம்பு தனது 48வது படத்தில் நடித்து முடித்ததும், மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்கியதும் மீண்டும் இணைய முடிவெடுத்துவிட்டார்களாம். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்திற்கான கதை, திரைக்கதையை மகிழ் திருமேனி ரெடி செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் சிம்பு ரசிகர்களுக்கான செம்ம கமர்சியல் ட்ரீட்டாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிம்பு - மகிழ் திருமேனி இணையும் படத்தின் தயாரிப்பாளரை உறுதி செய்யும் வேலைகள் சைலண்டாக நடந்து கொண்டிருக்கிறதாம். அதனால், இக்கூட்டணி 2024ல் கண்டிப்பாக ஒரு மாஸ் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் எப்போது வெளியாகும் என இதுவரை எந்த தகவலும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X