Simbu: ஓவர் ஆட்டிட்யூட் காட்டிய சிம்பு... மலையாள டாப் ஹீரோவை ஓக்கே செய்த கெளதம் மேனன்!

சென்னை: மின்னலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனன் இப்போது நடிப்பிலும் பிஸியாகிவிட்டார்.

பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள கெளதம் மேனனுக்கும் நடிக்கும் சிம்புவுக்கும் இடையே செம்மையான கெமிஸ்ட்ரி இருந்தது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இக்கூட்டணியில் படங்கள் வெளியாகின.

இந்நிலையில், சிம்பு ஓவர் ஆட்டிட்யூட் காட்டியதால் மலையாள ஹீரோக்களை இயக்க ரெடியாகிவிட்டாராம் கெளதம் மேனன்.

ஓவர் ஆட்டிட்யூட் காட்டிய சிம்பு: சிம்பு - கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. சிம்பு ஜோடியாக த்ரிஷாவும், இசையில் ஏஆர் ரஹ்மானும் இப்படத்தின் இன்னொரு பெரிய பிளஸ். 2010ம் ஆண்டு வெளியான இந்தப் படம் 2K கிட்ஸின் முதல் காதல் காவியமாக கொண்டாடப்படுகிறது.

 Simbu: Mammootty Fahadh Faasil will replace Simbu in the Gautham Menon film

இதனையடுத்து அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படங்களிலும் சிம்பு, கெளதம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தது. இதில் வெந்து தணிந்தது காடு கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கேங்ஸ்டர் ஜானரில் உருவான இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கான லீட் கொடுத்திருந்தார் கெளதம் மேனன். இதனால் விரைவில் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் சிம்புவுக்கும் கெளதம் மேனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணா இயக்கிய பத்து தல படத்தில் சிம்பு வில்லனாக நடித்திருந்தார். ஆனாலும் இருவரும் சந்தித்துக்கொள்வது போன்றோ, சண்டை போடுவது மாதிரியோ காட்சிகள் இல்லாமல் இருந்தது. இது எல்லாவற்றுக்கும் காரணம் சிம்பு - கெளதம் இடையேயான மோதல் என சொல்லப்படுகிறது.

இருவருமே நெருங்கிய நண்பர்களாக பழகி வந்ததால் சிம்புவிடம் உரிமையாக பேசினாராம் கெளதம். ஆனால் தனக்கு மரியாதை கொடுக்காமல் கெளதம் பேசிவிட்டதாக ஃபீல் செய்துள்ளார் சிம்பு. மேலும், கெளதம் நடிப்பதில் பிஸியாகிவிட்டதால் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் இயக்க அவருக்கு நேரம் இருக்காது என சிம்பு ஜாலியாக கூறிவிட்டார். ஆனாலும் கெளதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தரப்பில் இருந்து வெந்து தணிந்தது காடு 2ம் பாகத்திற்காக சிம்புவிடம் பேசப்பட்டதாம்.

ஆனால், அவர் தற்போது STR 48 படத்தில் நடிக்கவிருப்பதை காரணம் காட்டி கெளதம் மேனனை ரிஜக்ட் செய்துவிட்டதாக தெரிகிறது. இருப்பினும் இன்னும் பொறுமையாக காத்திருந்த கெளதம் மேனனுக்கு சிம்பு தரப்பில் இருந்து சரியான பதில் வரவில்லையாம். அதனால், மலையாளத்தில் ஒரு படம் இயக்கலாம் என ரெடியாகிவிட்டாராம் கெளதம். அதில், மம்முட்டி, ஃபஹத் பாசில் இருவரையும் இணைந்து நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம்.

கெளதம் மேனனின் இந்த பிளான் மலையாள திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகலாம் எனவும், அடுத்தாண்டு படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கெளதம் மேனன் தற்போது மம்முட்டியின் பஜூக்கா படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X