சிம்பு - நயன்தாரா திடீர் திருமணம்... புதுப் படத்துக்கு இப்படியும் பப்ளிசிட்டி ஸ்டன்ட்!
சென்னை: சிம்புவும் நயன்தாராவும் திடீர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
விசாரித்ததில் இந்தத் திருமணம் ஒரு பக்கா பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்று தெரிய வந்தது.
சிம்பு - நயன்தாரா இருவரும் எட்டாண்டுகளுக்கு முன் காதலர்கள். அதன் பிறகு சிம்புவைப் பிரிந்தார் நயன்தாரா.
பின்னர் அவரும் சில காதல்களைச் சந்தித்தார். சிம்புவும் சில காதல்களைச் சந்தித்து, கடைசியாக ஹன்சிகாவுடன் காதல் முறிவையும் சந்தித்தார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு
சிம்புவும் நயன்தாராவும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் பாண்டிராஜ் தான் இப்போது இயக்கும் இது நம்ம ஆளு படத்துக்காக இருவரையும் ஜோடி சேர வைத்தார்.

திருமணம்
அதன் பிறகு இருவருக்கும் மீண்டும் பழைய காதல் துளிர்த்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு-நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.

மே 1-ம் தேதி
சமீபத்தில்தான் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1-ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் சிலர் செய்தி பரப்பி வருகின்றனர்.

பப்ளிசிட்டி ஸ்டன்ட்
ஆனால் விசாரித்த வரையில், இந்தத் திருமணம், அதுகுறித்த புகைப்பட வெளியீடு எல்லாமே ஒரு விளம்பர ஸ்டன்ட் என தெரிவித்தனர்.
ஏற்கனவே ராஜா ராணி' படத்தை பரபரபரப்பாக நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர் என செய்தி பரப்பினர்.
அதே டெக்னிக்கை சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு' படத்துக்காகவும் உபயோகிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











