பெரிய பட்ஜெட் படம்.. நீங்க கண்டிப்பா இருக்கணும்.. சிம்புவிற்கு ஸ்பெஷல் அழைப்பு.. பொன்னியின் செல்வன்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Recommended Video

Ponniyin Selvan Movie: மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடி- வீடியோ

சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

எழுத்தாளர் கல்கியின் வரலாற்று சிறப்பு மிக்க நாவலான பொன்னியின் செல்வனை படமாக எடுக்க இயக்குனர் மணிரத்னம் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அவர் தீவிரமாக திரைக்கதை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த படம் இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்க போகிறது என்கிறார்கள். லைக்கா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார். இதுவரை இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், பார்த்திபன், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் ஆகியோர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில முக்கிய நடிகர்கள் விரைவில் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளனர்.

என்ன கதாபாத்திரம்

என்ன கதாபாத்திரம்

பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத் தேவன், அருண் மொழி வர்மன் மட்டுமில்லாமல் நிறைய முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறது. கதை முழுக்க எல்லா முக்கிய கதாபாத்திரங்களும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் இந்த கதாபாத்திரங்களில் யார் நடிக்க வைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிம்பு

சிம்பு

இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்புவும் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளாராம். இதற்காக தயாரிப்பு குழு சிம்புவுடன் பேசி வருகிறது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் சிம்புவிற்கு என்ன கதாபாத்திரம் என்று இன்னும் முடிவாகவில்லை. முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றுதான் சிம்புவிற்கு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

சிம்பு தொடர் தோல்விகளால் முக்கியமான பிரேக்கிற்கு காத்து இருக்கிறார். அவருக்கு பொன்னியின் செல்வன் படம் மூலம் முக்கிய பிரேக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே மணிரத்னம் நடிப்பில் சிம்பு நடித்த செக்க சிவந்த வானம் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X