பந்தி வரைக்கும் பார்த்து பார்த்து கவனித்த கமல்.. கழுத்தையே பிடிச்சிட்டாராம் சிம்பு.. என்ன மேட்டர்?

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக்கியுள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் வெளியாகி ஜப்பான் வரை ரீல்ஸில் டிரெண்டாகி வருகிறது.

மணிரத்தினம் - கமல்ஹாசன் கூட்டணி நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது. அதே அளவுக்கான மேஜிக் இந்த படத்தில் நடக்கும் என எதிர்பார்க்கின்றனர். துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், அவர்கள் இருவருக்கு பதிலாக சிம்பு மற்றும் அசோக் செல்வன் படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Simbu may be the main villain in Kamal Haasan Thug Life details leaked in Kollywood

வரும் மே 16ஆம் தேதி தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்புவிடம் ஓவர் பாசம்: தக் லைஃப் போஸ்டரில் இருந்து சிம்பு ஓரம் கட்டப்பட்டு விட்டதாகவும், கமல்ஹாசனுக்கு மட்டுமே படத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக சில வதந்திகள் கிளம்பிய நிலையில், சமீபத்தில் கலைவாணர் அரங்கத்தில் வெளியான முதல் சிங்கிள் வெளியீட்டின் போது சிம்பு மீதும் அவருடைய தந்தை மீதும் தனக்கு இருக்கும் அலாதியான பாசத்தைக் குறித்து வெளிப்படையாகவே கமல்ஹாசன் பேசினார்.

பந்தியில் கவனிப்பு: மேலும், தனியாக சிம்புவை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் பந்தியில் அமர்ந்து உணவு உண்ணும் போது மணிரத்னம் சைவம் மட்டுமே சாப்பிடுவார் என்று அவரை பார்த்துக் கொண்ட கமல்ஹாசன் இந்தப் பக்கம் சிம்புவுக்கு நிறைய மட்டன் மற்றும் மீன்களை வையுங்கள் என பந்தியில் அவரை வேறலெவலில் கவனித்துக் கொண்டார்.

கமல் கழுத்தைப் பிடித்த சிம்பு: தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்றும் அசோக் செல்வன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் தான் மெயின் வில்லன் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தக் லைஃப் படத்தின் மெயின் வில்லனே சிம்புவாக இருக்க கூடும் என்றும் கமல்ஹாசனின் கழுத்தைப் பிடித்து அவர் சண்டை போடும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மிரட்டி விட்ரும்: சிம்புவை அழைத்து வந்து சிம்பிளாக சீன் வைத்தால் நல்லாவா இருக்கும். இப்படியேதாவது நெகட்டிவ் ரோல் கொடுத்தால் தான் அவருக்கு சரியான தீனியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தக் லைஃப் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அடுத்த சிங்கிள் எப்போது?: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ஜிங்குச்சா பாடல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ரெட்ரோ படத்தின் கனிமா பாடலுக்கு அடுத்ததாக இளைஞர்கள் ஜிங்குச்சா பாடலுக்கு தான் தற்போது வைப் ஆகி ரீல்ஸ் போட்டு வருகின்றனர். இந்நிலையில், அடுத்து ஒரு மெலோடி பாடலை ஏ.ஆர். ரஹ்மான் வரும் மே 7ம் தேதி வெளியிடப் போகிறார் என்றும் மே 16ம் தேதி மொத்த இசை ஆல்பமும் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் வெளியீட்டு விழாவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X