7 ஆண்டுகள் கழித்து இன்று நயன்தாராவை சந்தித்த சிம்பு

By Siva

சென்னை: 7 ஆண்டுகள் கழித்து சிம்புவும் அவரது முன்னாள் காதலியான நயன்தாராவும் இன்று சந்தித்து பேசினர்.

2006ம் ஆண்டில் ரிலீஸான வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஜோடியாக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

காதலர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

நயன்-பிரபுதேவா

நயன்-பிரபுதேவா

சிம்புவை பிரிந்த நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து படத்தில் நடிப்பதை நிறுத்தினார். ஆனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து நயன் மீண்டும் நடிக்க வந்தார்.

ஹிட்

ஹிட்

நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. நயன் நடித்த ஆரம்பம், ராஜா ராணி ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அவர் கைவசம் இளம் ஹீரோக்களின் படங்கள் உள்ளன.

சிம்பு ஜோடி

சிம்பு ஜோடி

பாண்டிராஜ் படத்தில் முன்னாள் காதலன் சிம்புவுடன் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் பாண்டிராஜ் படப்பிடிப்பில் கடந்த 2 நாட்களாக கலந்து கொண்டு நடித்து வந்தார். அப்பொழுது படப்பிடிப்பில் சிம்பு இல்லை.

சந்திப்பு

சந்திப்பு

வெளிநாட்டில் இருந்து திரும்பிய சிம்பு இன்று படப்பிடிப்புக்கு வந்தார். இதையடுத்து பாண்டிராஜ் சிம்பு-நயன் வரும் காட்சிகளை படமாக்கினார். 7 ஆண்டுகள் கழித்து சிம்புவை சந்தித்தார் நயன். இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துவிட்டு நடிக்கத் துவங்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X