சினிமா கலைஞர்களின் இறப்பு நெஞ்சை உலுக்குது.. இந்தியன் 2 விபத்து.. சிம்பு படக்குழு மெளன அஞ்சலி!
Recommended Video
சென்னை: இவிபி ஃபிலிம் சிட்டியில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகள் நெஞ்சை பதற வைத்தாலும், நேற்று இரவு இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் நடந்த விபத்து தேசத்தையே உலுக்கி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியன் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
போபால், குவாலியரை தொடர்ந்து, சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போட்டு சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு, கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், மூன்று பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

கண்ணீர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் இன்றைய தினம் கருப்பு நாளாக கருதப்படுகிறது என லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது, மேலும், உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரடெக்ஷன் அசிஸ்டென்ட் மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும், காலை முதலே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்ணீர் விட்ட மனோபாலா
உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு, ஆறுதல் எப்படி சொல்றதுன்னே தெரியல, ஷங்கர் சாரும், கமல்ஹாசனும் இந்த துயரில் இருந்து எப்படி மீள போறாங்கண்ணே தெரியல, ஷூட்டிங் எடுக்கும் போதெல்லாம் இதே நினைப்பு வருமே.. எப்படி இதில் இருந்து மீளப் போறாங்களோ என நடிகர் மனோபாலா வீடியோ மூலம் தழுதழுத்த குரலில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வரலக்ஷ்மி சரத்குமார் இரங்கல்
இந்தியன் 2 ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் உலுக்கி உள்ள நிலையில், பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் பிரபலங்கள் என பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தனது ட்விட்டர் பதிவில், இறப்பு என்பது அனைவருக்கும் வரும் ஒன்றுதான்.. ஆனால், இதுபோன்ற எதிர்பாராத இறப்புகள் நெஞ்சை உலுக்குகின்றன என பதிவிட்டுள்ளார்.
அதிர்ச்சியா இருக்கு
கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் ரகுல் கலந்து கொண்டதாக தகவல் இல்லை. இந்நிலையில், விபத்து குறித்து அறிந்த ரகுல், தனது ட்விட்டர் பக்கத்தில், ரொம்ப அதிர்ச்சியா இருக்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

சிம்பு படக்குழு
ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படக்குழு சார்பாக, இந்தியன் 2 ஷூட்டிங்கில் நடந்த கோர விபத்துக்காக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சினிமா கலைஞர்களின் மரணம் நெஞ்சை உலுக்குவதாகவும், இதுபோன்ற அசம்பாவிதமான சம்பவம் இனி நடக்கக் கூடாது என பிரார்த்திப்பதாகவும் இயக்குநர் ஜமீல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











