சிம்பு பட நடிகையுடன் ஜோடி சேரும் ஹரிஷ் கல்யாண்!

சென்னை : நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் இப்பொழுது இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே,தாராள பிரபு மற்றும் சமீபத்தில் வெளியான ஓமணப் பெண்ணே உள்ளிட்டவை ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன

இந்த நிலையில் இயக்குனர் சசி உடன் முதல் முறையாக இணைந்து ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்து வரும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக சிம்பு பட நடிகை நடித்து வருவது தெரியவந்துள்ளது.

இடையே நட்பு ஏற்பட்டது

இடையே நட்பு ஏற்பட்டது

நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆரம்பத்தில் ஒரு சில சுமாரான படங்களை கொடுத்து இருந்தாலும் தற்போது கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார். குறிப்பாக பியார் பிரேமா காதல் திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் இடையே நட்பு ஏற்பட்டது.

லிவிங் டுகெதர்

லிவிங் டுகெதர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த உடனேயே ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாடர்ன் லவ் மற்றும் லிவிங் டுகெதர் மையமாகக் கொண்டு வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இளம் இயக்குனர் இளன் இப்படத்தை இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க ரொமான்டிக் காட்சிகள் திகட்டாத காதல் காட்சிகள் என வெளியான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த ஜோடி ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக ஆகினர்.

பெல்லி சூபுழு தமிழ் ரீமேக்

பெல்லி சூபுழு தமிழ் ரீமேக்

மேலும் ஹரிஷ் கல்யாணுக்கு தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்று தந்தன. இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பெல்லி சூபுழு படத்தின் தமிழ் ரீமேக் ஓமணப்பெண்ணேவில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருப்பார்.

நீண்ட தலைமுடியுடன்

நீண்ட தலைமுடியுடன்

பெரும் எதிர்பார்ப்பில் உருவான ஓமணப்பெண்ணே இறுதியில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி அனைவரிடத்திலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் ஹரிஷ் கல்யான் இயக்குனர் சசி உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. அதற்காக நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.

வெந்து தணிந்தது காடு ஹீரோயின்

வெந்து தணிந்தது காடு ஹீரோயின்

காதும் காதும் வைத்தவாறு எந்த தகவலையும் வெளியிடாமல் இப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இதில் நடிக்கும் கதாநாயகி நடிகையை குறித்த முக்கிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் சித்தி இட்னானி தான் ஹரிஸ் கல்யாண் ஜோடியாக இந்த படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. குஜராத்தி நடிகையான சித்தி இட்னானி தமிழில் ஆரம்பத்திலேயே இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X