சிம்பு பட போஸ்டரும் விஜய் பட தலைப்பும்தான் பப்ளிசிட்டிக்கு உதவுச்சு... லவ் டுடே பிரதீப் ரங்கநாதன்

சென்னை: இரண்டே படங்களில் தனக்கான இடத்தை இயக்குநராகவும் நடிகராகவும் பிடித்துக் கொண்டார் லவ் டுடே திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப்.

தற்சமயம் பிற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்கவும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.

இந்நிலையில் விஜய் மற்றும் சிம்பு படங்கள் எப்படி தன்னுடைய படத்தின் விளம்பரத்திற்கு உதவியது என பிரதீப் பேட்டி கொடுத்துள்ளார்.

யாருமே கண்டுக்கல

யாருமே கண்டுக்கல

நான் முதல் குறும்படத்தை இயக்கியபோது அது மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதில் நடித்தவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். நானும் அங்குதான் இருப்பேன், பாராட்டு பெற்ற பின்னர் என்னை பார்த்து,"நீ இங்கதான் இருக்கியா நா கவனிக்கல, இல்லன்னா உன்ன இயக்குநர்னு சொல்லியிருப்பேன்" என்று கூறுவார்கள். பின்னர் நான் இயக்கிய குறும்படங்களில் நானே நடித்தேன். முன்பு கிடைக்காத அடையாளம் பின்னர் கிடைக்க ஆரம்பித்தது. ஜெயம் ரவி, எஸ்.ஜே சூர்யாவிடம் கதை கூறும்போது அவர்களும்,"உனக்கு நடிப்பு வருகிறது" என்று என்னை பாராட்டியிருக்கிறார்கள் என பிரதீப் தெரிவித்துள்ளார்

லவ் டுடே தலைப்பு

லவ் டுடே தலைப்பு

இந்தக் காலத்து காதலர்களை படம் பிரதிபலிப்பதால் லவ் டுடே என்ற தலைப்பு என் படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. அது மட்டுமின்றி ஒரு டிரஸ் எடுத்து தைத்து போடுவதை விட ரெடிமேட் உடை எடுத்து போட்டால் முயற்சி குறைவு. நான் புதுமுகமாக அறிமுகமாவதால் குறைவான நேரத்தில் எனக்கு விளம்பரம் தேவைப்பட்டது.

விஜய் சம்மதம்

விஜய் சம்மதம்

லவ் டுடே என்கிற தலைப்பு அதுவே அதனை விளம்பரம் செய்து கொண்டது. இதற்காக முறையாக அந்தப் படம் சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்றோம். விஜய் சாரிடமும் அனுமதி வாங்கினோம். ஏற்கனவே பிகில் திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்ததால் அவரிடம் எளிதாக கேட்க முடிந்தது. லவ் டுடே படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு நடிகர் சிம்புவும் எனக்கு ஃபோன் கால் செய்து பாராட்டினார்.

வல்லவன் உதாரணம்

வல்லவன் உதாரணம்

விசயம் என்னவென்றால், என்னுடைய படத்திற்கு விளம்பர வடிவமைப்பு எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு நான் உதாரணமாக எடுத்துக் கொண்டதே அவருடைய வல்லவன் திரைப்படத்தை தான். பப்ளிசிட்டி டிசைன் என்பது ஒரு படத்தை பப்ளிசிட்டி செய்ய வேண்டும். அந்த வகையில் வல்லவன் படத்தின் போஸ்டர்கள் மிகப் பெரிய வைரலானது. என்னுடைய குழுவினரிடமும் நான் அப்படிப்பட்ட பப்ளிசிட்டியை உண்டாக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். அப்படி இருக்கும்போது அவரே எனக்கு ஃபோன் கால் செய்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்று பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X