சிம்பு - நயன்தாரா படத்துக்கு தலைப்பு இது நம்ம ஆளு?
சிம்பு - நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள புதிய படத்துக்கு இது நம்ம ஆளு என தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கும் படம் இது. முன்னாள் காதலர்களான சிம்புவையும் நயன்தாராவையும் ஜோடி சேர்த்ததிலிருந்தே இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது.

பரபர தலைப்பு
தலைப்பு வைக்காமலேயே இந்த பரபரப்பு கிளம்பிவிட்டதால், அதற்கேற்ப பரபர தலைப்பை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.

ஒண்ணும் சரியா அமையல
ஆரம்பத்தில் 'கதவைத் திற காதல் வரட்டும்', 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு' என்றெல்லாம் தலைப்பு யோசித்தார்களாம்.

இது நம்ம ஆளு
ஆனால் நயன்தாரா சிம்புவின் ஆள் என்பதைக் குறிப்பிடும் வகையில் இது நம்ம ஆளு என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளாராம் பாண்டிராஜ்.

இது பாக்யராஜ் தலைப்பாச்சே
ஆனால் இந்த தலைப்பு கிடைக்குமா என்பதுதான் சந்தேகம். இயக்குநர் - நடிகர் கே பாக்யராஜின் படம் இது. அவரே இந்தத் தலைப்பில் மீண்டும் படம் இயக்கத் திட்டமிட்டிருந்தார்.
எனவே பாக்யராஜ் சம்மதமில்லாமல் இந்தத் தலைப்பை பாண்டிராஜால் பயன்படுத்தவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











