நயனை விட மாட்டார் போல இருக்கே.. மாநாடு டீசரிலும் தொடரும் நம்பர் சென்டிமென்ட்.. இது லவ் தான சிம்பு!

சென்னை: மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் ஒவ்வொரு போஸ்டர் ரிலீஸ் மற்றும் டீசர் ரிலீஸ் என எல்லாவற்றிலும் நம்பர் 9 முக்கிய பங்காற்றி வருகிறது.

Recommended Video

STR பர்த் டே.. தெறிக்கவிடும் மாநாடு டீசர்… 5 மொழிகளில் அட்டகாசம்!

மாநாடு திரைப்படத்தில் அந்த எண் முக்கிய பங்காற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்பு தனது முன்னாள் காதலியான நயன்தாராவை மனதில் வைத்துக் கொண்டே இப்படி செய்கிறார் என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

2006ம் ஆண்டு சிம்பு இயக்கி நடித்து வெளியான வல்லவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார் நயன்தாரா. அந்த சமயத்தில் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. லிப் லாக் புகைப்படங்கள் எல்லாம் வைரலானது. பின்னர் நயன்தாரா சிம்புவை பிரேக் அப் செய்து விட்டார்.

மீண்டும் இணைந்து

மீண்டும் இணைந்து

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிம்புவையும் நயன்தாராவையும் இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்த்து நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கத் தொடங்கி விட்டார்.

ஈஸ்வரன் வசனம்

ஈஸ்வரன் வசனம்

பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தில் முன்னாள் காதலியாக நந்திதா நடித்து இருப்பார். அடுத்தவன் பொண்டாட்டியை பார்க்கிறது தப்பு என பால சரவணன் சிம்புவை பார்த்து சொல்லும் போது, அடுத்தவன் காதலியை கல்யாணம் பண்றதும் தப்புன்னு அவன் புருஷன் கிட்ட போய் சொல்லுடா என சிம்பு பேசிய வசனமும் பரபரப்பை கிளப்பியது.

நயனை விடமாட்டார் போல

நயனை விடமாட்டார் போல

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு தொடர்ந்து இன்று 2:34 மணிக்கு வெளியான மாநாடு படத்தின் டீசர் வரை முற்றிலும் 'நயன்' மயமாகவே இருப்பது கவனிக்க வைக்கிறது. மாநாடு படத்தில் 9ம் நம்பருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறதா? அல்லது சர்ச்சையை கிளப்பி எதிர்பார்ப்பை ஏற்படுத்த படக்குழு திட்டமிட்டு செய்யும் ஸ்ட்ராட்டஜியா? என்பது தெரியவில்லை.

டீசரிலும் நயன்

டீசரிலும் நயன்

டெனட் படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் மாநாடு படத்தின் ரீவைண்ட் டீசரில் காலம் குறித்து சிம்பு பேசும் வசனத்தைத் தொடர்ந்து அவரது கை காட்டும் இடத்திற்கு பின்னாடி இருக்கும் பிரம்மாண்ட கடிகாரத்தில் 9ம் நம்பரையும் காட்டி உள்ளனர். நயன் மீதுள்ள லவ்வா? 9ம் நம்பர் ராசியா? என்பதை சிம்பு தான் விளக்க வேண்டும்.

கெளதம் மேனன் படத்தில்

கெளதம் மேனன் படத்தில்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தில் நயன்தாரா ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கும் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X