சிம்பு-நயன் இடையே மீண்டும் காதலா?: பரபரக்கும் பாண்டிராஜ் ஷூட்டிங் ஸ்பாட்
சென்னை: சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் காதலிக்கிறார்கள் போன்று என்று பாண்டிராஜ் படப்பிடிப்பில் உள்ளவர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.
வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவும், நயன்தாராவும் காதலித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். சிம்புவை பிரிந்த நயன் பிரபுதேவாவை காதலித்தார். அவரையே திருமணம் செய்வதற்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.
ஆனால் பிரபுதேவாவுடனான காதலும் முறிந்ததால் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்தார்.

செகண்ட் இன்னிங்ஸ்
மீண்டும் நடிக்க வந்த நயன்தாராவுக்கு மவுசு குறையவில்லை. மாறாக மவுசு அதிகரித்துள்ளது. இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார்.

பாண்டிராஜ் தேவதை
பாண்டிராஜ் சிம்புவை வைத்து எடுத்து வரும் படத்திற்கு ஒரு தேவதையை தேடி அலைந்து இறுதியில் நயன்தாராவை தேர்வு செய்தார்.

தயக்கம்
முன்னாள் காதலர் சிம்பவுடன் நடிக்க நயன்தாரா தயங்கியுள்ளார். ஆனால் பாலிவுட்டில் எல்லாம் முன்னாள் காதலர்கள் சேர்ந்து நடிப்பதில்லையா என்று உதாரணங்கள் கூறி அவரை நடிக்க சம்மதிக்க வைத்துவிட்டனர்.

மீண்டும் சேர்ந்தனர்
தயக்கத்தை விட்டுவிட்டு நயன்தாரா பல ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவை சந்தித்தார். பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு இருவரும் நடிக்கத் துவங்கினர்.

மீண்டும் காதல்?
பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவும், நயனும் சிரித்து சிரித்து பேசுகிறார்களாம். சிம்பு ஜோக் அடித்தால் நயன் விழுந்து விழுந்து சிரிக்கிறாராம். இதைப் பார்க்கும் படக்குழுவினர் அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக சிரித்துக் கொண்டே பேசிக்கொள்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











