»   »  ராஜா ராணி சக்சஸ் பார்ட்டியில் சிம்பு – நயன்தாரா

ராஜா ராணி சக்சஸ் பார்ட்டியில் சிம்பு – நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றி விழாவில் நயன்தாராவிற்கு கேக் ஊட்டி வெற்றியை பகிர்ந்து கொண்டார் ஆர்யா. இந்த விழாவில் நடிகர் சிம்புவும் பங்கேற்றார் என்பதுதான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா நடித்துள்ள ராஜா ராணி படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கொண்டாப்பட்டது. இந்த படத்தின் குழுவினர் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த பார்ட்டிக்கான ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவில் 'ராஜாராணி' படத்தில் நடித்த ஆர்யா, ஜெய், நயன்தாரா மற்றும் இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

கேக் ஊட்டிய ஆர்யா

கேக் ஊட்டிய ஆர்யா

விழாவில் கேக் வெட்டி அதை ஒருவருக்கொருவர் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆர்யா, நயன்தாராவுக்கு கேக் ஊட்டினார். பதிலுக்கு ஆர்யாவும் நயன்தாராவுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

நயன்தாரா உடன் சிம்பு

நயன்தாரா உடன் சிம்பு

இந்த பார்ட்டியில் சிம்பு, ஜீவா, ஷாம், சாந்தனு, ஸ்ரீகாந்த், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா பார்ட்டியில் சிம்பு பங்கேற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

நடிகைகள் வாழ்த்து

நடிகைகள் வாழ்த்து

ரம்யா கிருஷ்ணன், கார்த்திகா, ஆண்ட்ரியா, சோனியா அகர்வால் உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தங்க சங்கிலி பரிசு

தங்க சங்கிலி பரிசு

படத்தின் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சண்முக சுந்தரம் ஆகியோர் படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தங்க சங்கிலி ஒன்றை பரிசாக அளித்தனர்.

English summary
Yesterday lovers Simbu and Nayanthara had a meeting during the party of Raja Rani movie success.
Please Wait while comments are loading...