»   »  ஏஏஏ சிம்பு: மூன்று அல்ல ஒன்னே ஒன்னு தானா கோப்ப்பால்?

ஏஏஏ சிம்பு: மூன்று அல்ல ஒன்னே ஒன்னு தானா கோப்ப்பால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு மூன்று அல்ல ஒரேயொரு கதாபாத்திரத்தில் தான் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்த காரணத்தால் சிம்பு ரசிகர்கள் ஏக குஷியாகிவிட்டனர்.

மதுரை மைக்கேல்

மதுரை மைக்கேல்

மூன்று கதாபாத்திரங்களில் கொஞ்சம் குண்டாக, தாடி மீசையுடன் கூடிய மதுரை மைக்கேல் மற்றும் அஷ்வின் தாத்தா கதாபாத்திரங்களுக்கான டீஸர்கள் வெளியாகின.

இளம் சிம்பு

இளம் சிம்பு

மூன்றாவது மற்றும் மிகவும் இளமையான கதாபாத்திரத்தின் விபரங்களை மட்டும் இனியும் வெளியிடாமல் உள்ளனர். அந்த கதாபாத்திரத்திற்காக சிம்பு உடல் எடையை குறைக்கிறாராம்.

மூன்று இல்லை

மூன்று இல்லை

படத்தில் சிம்பு மூன்று கதாபாத்திரங்களில் வரவில்லையாம். மாறாக ஒரே ஆள் தானாம். அவரின் இளமை பருவம் முதல் முதுமை பருவம் வரை நடப்பது தான் கதையாம்.

எப்படி?

எப்படி?

இளம் வயதில் மதுரை மைக்கேலாக இருக்கும் சிம்பு வயதான பிறகு அஷ்வின் என்ற பெயரை பயன்படுத்துகிறாராம். படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

English summary
According to reports, Simbu is not playing three different roles in his upcoming movie Anbanavan Asaradhavan Adangadhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil