தாய் குழந்தைக்கு வச்சிருக்க பாலை குடிக்கிறீங்களே.. ஹியூமன்ஸாடா நீங்க.. ட்ரோலாகும் சிம்பு பேட்டிகள்!
சென்னை: நடிகர் சிம்புவின் பழைய பேட்டிகளை திடீரென டிரெண்ட் செய்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நடிகர் சிம்பு அதிக வெயிட் போட்ட நிலையில், பல பேட்டிகள் கொடுத்திருந்தார். அவர் பேசியதை கேட்டு பலரும் சிரித்து கிண்டல் செய்தனர். ஆனால், தற்போது ஆளே மாறி தனது ரசிகர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார் சிம்பு. ஆனால், திடீரென இப்படி அவரது பேட்டிகளை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்ய என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் அடுத்து சிம்பு நடிக்க உள்ள படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், திடீரென இந்த பேட்டிகளை எங்கிருந்து ரசிகர்கள் எடுத்துப் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர் என்றே தெரியவில்லை.

எஸ்டிஆர் 48: கமல்ஹாசன் தயாரிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக பீரியட் படமாக எஸ்டிஆர் 48 படம் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக உள்ளது. அந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் மட்டும் நடைபெற்றுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு பக்காவாக மேக்கிங் செய்யப்பட்டு ஒரே ஆண்டுக்குள் படப்பிடிப்பு நிறைவடைந்து 2025ல் தரமான படமாக எஸ்டிஆர் 48 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய் குழந்தைக்கு வச்சிருக்க பாலை குடிக்கிறீங்களே: நடிகர் சிம்பு சில வருடங்களுக்கு முன்பாக மீடியாவில் கொடுத்த சில பேட்டிகளில் அவர் பேசியது அதிகளவில் ட்ரோல் செய்யபப்ட்டது வந்தது. அந்த பேட்டியில் தாய் குழந்தைக்கு வச்சிருக்க பாலை குடிக்கிறீங்களே.. மாடு அதோட கன்னுக்குட்டிக்கு வச்சிருக்க பாலுய்யா அது.. அதைப் போய் காஃபிடேவிலும் பாரிஸ்டாவிலும் குடிச்சிட்டு பேசுறீங்க, அப்படி குடிக்காத யாராவது இருந்தா அவன் வந்து கேள்வி கேளு என பேசிய வீடியோக்களை வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஹேப்பியா இருக்கேன்: ஒரு மாதிரி சந்தோஷமா இருக்கேன் சொல்றதை விட ரொம்ப ஹேப்பியா இருக்கேன் என சிம்பு இன்னொரு பேட்டியில் பேசிய வீடியோவையும் ஷேர் செய்து பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், அதிகளவிலான மீம்களும் சிம்புவை வைத்து திடீரென வலம் வருகின்றன.
குவியும் மீம்ஸ்: செம ஃபன் வீடியோ வந்திருக்கு மாமா.. பரிதாபங்களா? அல்லது விஜே சித்து வீடியோ விலாகா மாமா?.. சிம்புவோட ஓல்டு இண்டர்வியூ மாமா என மீம் போட்டும் கலாய்த்து வருகின்றனர்.
அதெல்லாம் அப்போ: திடீரென சிம்புவின் பழைய பேட்டிகளை வைத்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், இதெல்லாம் தனுஷ் ரசிகர்கள் செய்யும் மோசமான செயல் என்றும் அதெல்லாம் அப்போ சிம்பு ஆளே தற்போது மாறிவிட்டார். ஆன்மிகத்தில் சென்று ஆத்மனாக மாறிய சிம்பு சீக்கிரமே தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப் படங்களை கொடுப்பார் என சிம்பு ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











