“இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த திட்டமும் இல்லை”.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு!

தனது திருமணம் பற்றி ஊடகங்களில் பரவிய செய்திக்கு சிம்பு விளக்கமளித்துள்ளார்.

By Staff

Recommended Video

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு | Cinema News | வீடியோ

சென்னை: தனது திருமணம் மற்றும் புதிய படங்கள் குறித்து அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சிம்பு.
காதல், திருமணம், புதிய படம் என ஏதாவது ஒரு வகையில் சிம்புவின் பெயர் ஊடகங்களில் அடிபட்ட வண்ணம் தான் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் சமீபகாலமாக தவிர்க்க முடியாத கேள்வியாக உள்ளது, 'சிம்புவின் திருமணம் எப்போது?’ என்பது. அதுவும் குறளரசனின் திருமணத்திற்குப் பிறகு இந்தக் கேள்வியின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், சிம்புவிற்கு வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று ஒரு தகவல் வைரலானது. உறவினர் பெண் ஒருவரை அவர் மணமுடிக்க திட்டமிட்டிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. காரணம் இது உண்மையில்லை, வதந்தி என சிம்பு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஊடக பிணைப்பு:

ஊடக பிணைப்பு:

அதில், ‘என்னுடைய பயணம் மற்றும் ஊடகங்களுடனான பிணைப்பு என்பது நீண்ட காலமானது. என்னுடைய சினிமா வாழ்க்கையைத் தாண்டி ஊடகங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. ஒருவேளை ஊடகங்களில் பங்களிப்பு இல்லாமல் இருந்தால், என்னால் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது சொந்த சகோதரராகவும் மகனாகவும் நினைத்திருக்க மாட்டார்கள்.

 திருமண வதந்திகள்:

திருமண வதந்திகள்:

என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள் பரவுகின்றன.

நானே தெரிவிப்பேன்:

நானே தெரிவிப்பேன்:

தற்போது திருமணம் குறித்து எந்த திட்டமும் இல்லை என்பதை விளக்கிக் கொள்கிறேன். அதற்கான உரிய நேரத்தில் இதுகுறித்து நானே தெரிவிப்பேன். என்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் நிறைய வதந்திகள் பரவுகின்றன. ஒரு சினிமா நடிகராக பல தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை சந்திக்கவேண்டி இருக்கும். இது இணைந்து படம் இயக்குவதற்கு என்று இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

 மனச்சோர்வு:

மனச்சோர்வு:

இத்தகைய வதந்திகளால் என்னுடைய ரசிகர்கள் ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வு அடைகின்றனர். நான் உறுதியாக இருப்பதற்கு என்னுடன் இணைந்து நிற்கும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்' என இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X