»   »  சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டதா?: உண்மை என்ன?

சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டதா?: உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டதாகக் கூறு போலி புகைப்படம்

சென்னை: சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டதாகக் கூறு போலி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஆரவை மனதார காதலித்தார் ஓவியா. ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்கவில்லை. ஆரவின் மனம் மாறும் என்று காத்திருந்த ஓவியா பின்னர் தன் மனதை மாற்றிக் கொண்டார்.

பின்னர் சிங்கிளாக நிம்மதியாக இருப்பதாக தெரிவித்தார் ஓவியா.

 ஓவியா

ஓவியா

சிம்பு இசையில் ஓவியா மரண மட்டை பாடலை பாடியிரு்தார். இதையடுத்து சிம்பு, ஓவியா சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. ஓவியாவின் பாடலை அவரது ஆர்மிக்காரர்கள் ஹிட்டாக்கினர்.

புகைப்படம்

புகைப்படம்

சிம்புவுடன் ஓவியா பணியாற்றியுள்ள நிலையில் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

போட்டோஷாப்

போட்டோஷாப்

புகைப்படத்தை பார்த்த உடனே அது போலி என்று தெளிவாகத் தெரிகிறது. இது நம்ம ஆளு பட புகைப்படத்தை மாற்றி பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் சிலர் பொய்யான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

சினிமா

சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஓவியா படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்துகின்றனர்.

English summary
A fake news about Simbu-Oviya secret wedding is doing rounds with a fake photo. Oviya sang Marana Matta song for which Simbu composed the music. Oviya and Simbu are busy in their career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X