இன்னும் எடுக்கவே ஆரம்பிக்காத படத்தை 17 கோடிக்கு விற்ற சிம்பு & கோ!
மெரினா பட பிரஸ் மீட்டில் எனக்கு சினிமா வியாபாரமே தெரியாது என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன இயக்குநர் - தயாரிப்பாளர் பாண்டிராஜ், இப்போது கோடம்பாக்கத்துக்கே ட்யூஷன் எடுக்கும் அளவுக்கு வியாபாரத்தில் தேறிவிட்டார்.
இன்னமும் எடுக்கவே ஆரம்பிக்காத சிம்பு படத்தை அங்கே இங்கே என மொத்தம் ரூ 17 கோடிக்கு அவரும் சிம்புவின் அப்பா டிஆரும் விற்றுவிட்டதாக கோடம்பாக்கத்தில் ஆச்சர்யப்படுகிறார்கள்.
சிம்புவை வைத்து இவர் இயக்கும் படத்தை இவரே முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறார். டிஆர்தான் நிஜமான தயாரிப்பாளர் என்கிறார்கள். இதில் சிம்புவின் தம்பி குறளரசன்தான் இசையமைப்பாளர்.
படத்துக்கு போட்டிருக்கும் பட்ஜெட் ரூ 8 கோடி. சொந்தப்படம் என்பதால் சொதப்பாமல் சிம்பு நடித்துவிடுவார் என்ற அபார நம்பிக்கையில் இந்தத் தொகையை நிர்ணயித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் சேனல் உரிமை மற்றும் தமிழக விநியோக உரிமையை மட்டும் ரூ 17 கோடிக்கு விற்றுவிட்டாராம் சிம்புவின் அப்பா, தனக்கு வேண்டப்பட்ட டிவி நிறுவனத்துக்கு. இது தவிர வெளிநாட்டு உரிமை வேறு இருக்கிறது!


Click it and Unblock the Notifications











