ரிலீஸுக்கு முன்பே பிரம்மாண்டம் காட்டும் பத்து தல டீம்... சிம்பு ரசிகர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்!
சென்னை: பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த 3ம் தேதி வெளியானது.
ஏஆர் ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியிருந்த நம்ம சத்தம் என்ற இந்தப் பாடல், சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது.
மார்ச் 30ம் தேதி பத்து தல ரிலீஸாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ லான்ச், ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

சிம்புவின் அடுத்த அவதாரம்
கால்ஷீட் பிரச்சினை, ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வாரமல் டிமிக்கி கொடுப்பது என பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டே வந்தார் சிம்பு. ஆனால், 2021ல் வெளியான மாநாடு படத்திற்காக சிம்பு செய்திருந்த டெடிகேஷன் கோலிவுட்டையே ஆச்சரியப்பட வைத்தது. அதுமட்டும் இல்லாமல் நடிப்பிலும் சிம்பு அசத்தியதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடியை கடக்க வைத்தார். இதனையடுத்து கடந்தாண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் சிம்புவின் பத்து தல திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

ஆடியோ வெளியீட்டு விழா
ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம், மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த 3ம் தேதி சிம்பு பிறந்தநாளில் வெளியாகி ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து டீசர், ட்ரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அதுகுறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்டமான ஏற்பாடு
அதன்படி, பத்து தல படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் இரண்டும் மார்ச் 18ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது தனியார் கல்லூரியில் நடக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள பத்து தல ஆடியோ வெளியீட்டு விழா, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

அடுத்த படத்தின் அப்டேட்
அதேநேரம் பத்து தல இசை வெளியீட்டு விழாவில், சிம்புவின் அடுத்த படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. பத்து தல ஷூட்டிங் முடிந்தும் அமைதி காத்து வரும் சிம்பு, அடுத்து எந்த இயக்குநருடன் கூட்டணி வைக்கவுள்ளார் என்பது புதிராக உள்ளது. இந்நிலையில், கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக தான் சிம்புவின் பத்து தல உருவாகியுள்ளது. தற்போது கன்னடத்தில் முஃப்தி படத்தின் முந்தைய பாகம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்து தல ப்ரிகுவல் உருவாகுமா?
கன்னடத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த முஃப்தி படத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடித்திருந்தார். அவர் நடித்த கேங்ஸ்டர் கேரக்டரில் தான் தமிழில் சிம்புவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முஃப்தி படத்தின் ப்ரிகுவல் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஃப்தி படத்தின் முந்தைய பாகமாக உருவாகும் இந்தப் படத்திற்கு பைரதி ரனகல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். இதனால், சிம்புவின் பத்து தல படத்தின் முந்தைய பாகமும் உருவாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அது பத்து தல திரைப்படம் வெளியான பின்னரே உறுதியாகும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











