பத்து தல ரன்னிங் டைம்... சிம்புவின் ஆக்ஷனில் மிரண்டு போன சென்சார் டீம்!
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பத்து தல படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 18ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் சென்சார் அப்டேட், ரன்னிங் டைம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேங்ஸ்டர் ஏஜிஆர்
சிம்புவின் பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், சிம்பு, ஏஆர் ரஹ்மான், ப்ரியா பவானி சங்கர், இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, டிஆர் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளதால் பத்து தல படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது.

பத்து தல ரன்னிங் டைம்
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான 'மஃப்டி' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது பத்து தல. ஆனால், இது இது மஃப்டி படத்தின் முழுமையான ரீமேக் கிடையாது தழுவல்தான். 90 சதவீதம் வேறுவிதமாக எடுத்துள்ளேன். மஃப்டி - பத்து தல இரண்டு படங்களிலும் இரண்டு மூன்று காட்சிகள் மட்டும்தான் ஒரேமாதிரி இருக்கும் என்றுள்ளார். இந்நிலையில், பத்து தல படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடம் என தெரிய வந்துள்ளது.

சென்சார் அப்டேட்
அதேபோல், பத்து தல படத்தின் சென்சார் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. பத்து தல ட்ரெய்லர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் தெறிக்கவிட்டன. அதேமாதிரி தான் படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அன்லிமிடெட்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் பத்து தல படத்துக்கு சென்சாரில் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளதாம். இதனால் சிம்பு ரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு என்பதை பார்க்க முடிகிறது.

இரண்டாம் பாதியில் வேற லெவல்
முன்னதாக பத்து தல படத்தின் முதல் விமர்சனம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. சென்சார் காப்பியில் இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதி தாறுமாறாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். சிம்புவும் பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் செம்ம எனர்ஜியாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை வேற லெவலில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











