தரமாக வந்த பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ்... சிம்பு - ஏஆர் ரஹ்மான் கூட்டணியின் அடுத்த மேஜிக்

சென்னை: மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களைத் தொடர்ந்து சிம்பு நடித்துள்ள அடுத்த படம் பத்து தல.

சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பத்து தல மார்ச் 30ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது.

ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிளின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

 பத்து தல சிலம்பரசன்

பத்து தல சிலம்பரசன்

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு தற்போது பத்து தல ஷூட்டிங்கையும் முடித்து விட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக பத்து தல உருவாகியுள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம், தமிழிலும் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவராஜ்குமார் நடித்த பைரதி ரணகல் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிம்பு ஏஜிஆராக நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் 'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார்.

 ஃபர்ஸ்ட் சிங்கிள் நம்ம சத்தம்

ஃபர்ஸ்ட் சிங்கிள் நம்ம சத்தம்

பத்து தல ஷூட்டிங் கடந்த நவம்பரில் முடிவுக்கு வந்தது. முன்னதாக டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருந்த பத்து தல மார்ச் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளது. பிப்ரவரி 3ம் தேதியான நாளை சிம்புவின் பிறந்தநாள் என்பதால், நள்ளிரவு 12.06 மணிக்கு பத்து தல முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பை சூப்பரான கிளிம்ப்ஸ் வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

 நம்ம சத்தம் கிளிம்ப்ஸ் வீடியோ

நம்ம சத்தம் கிளிம்ப்ஸ் வீடியோ

இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் கறுப்பு வேஷ்டி, சட்டையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு. ஏஆர் ரஹ்மானின் இசையில் அவரே பாடியுள்ள இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். சிம்புவின் என்ட்ரியும் அவரது க்யூட்டான டான்ஸும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிம்பு - ஏஆர் ரஹ்மான் காம்போவில் இந்தப் பாடலும் மேஜிக்கலாக இருக்கும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிம்புவுக்காக ஏஆர் ரஹ்மான் குரல் கொடுத்துள்ளது நம்ம சத்தம் பாடலின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 எதிர்பார்ப்பில் சிம்பு ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் சிம்பு ரசிகர்கள்

சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியாகும் நம்ம சத்தம் பாடலை ட்ரெண்ட் செய்ய ரசிகர்கள் இப்போதே ரெடியாகிவிட்டனர். ஃபர்ஸ்ட் சிங்கிளைத் தொடர்ந்து அடுத்தடுத்து பத்து தல அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் பத்து தல படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X